சிங்கப்பூரில் ஓட்டுநர் ஒருவருக்கு சிறை, 8 ஆண்டுகள் வாகனம் ஓட்டத் தடை

சிங்கப்பூரில் வங்கி கணக்கு
Photo: Getty

சிங்கப்பூரில் டாக்ஸி ஓட்டுநர் ஒருவருக்கு நான்கு வாரங்கள் சிறைத்தண்டனையும், எட்டு ஆண்டுகள் வாகனம் ஓட்டத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

பாயா லெபார் சதுக்கத்தில் கட்டுப்பாட்டை இழந்த டாக்ஸி 51 வயதுமிக்க ஆடவர் ஒருவரை மோதியதில் அவர் உயிரிழந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் கடும் விபத்து: லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே மரணம்

இந்த சம்பவம் 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் தேதி அன்று நடந்ததாக CNA குறிப்பிட்டுள்ளது.

கட்டுப்பாட்டை இழந்த டாக்ஸி, நிறுத்தப்பட்டிருந்த மூன்று மோட்டார் சைக்கிள்கள் மீது மோதி, அதற்கு இடையில் நின்று கொண்டிருந்த ஆடவர் மீது மோதியது.

பலமாக மோதியதில் டாக்ஸியின் பானெட்டின் மீது பறந்து விழுந்த அவருக்கு கடுமையான காயம் ஏற்பட்டது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் 15 நாட்களுக்குப் பிறகு அக்டோபர் 19 அன்று மரணித்தார்.

கடும் காயம் காரணமாக அவருக்கு பல உறுப்புகள் செயலிழந்ததாக சொல்லப்பட்டது.

“சொந்த ஊரில் கடன் அதிகம் இருக்கு”.. முதலாளியின் S$88,600 பணத்தை அபேஸ் செய்த வெளிநாட்டவர்