பாசிர் பாஞ்சாங்கில் சாலையை கடக்கும்போது சைக்கிள் ஓட்டியை மோதி தூக்கிய கார்

SG Road Vigilante/FB

பாசிர் பாஞ்சாங் சாலையில் ஜீப்ரா கிராஸிங் கடக்கும் இடத்தில் டாக்ஸி ஒன்று சைக்கிள் ஓட்டுநர்மீது மோதும் காணொளி கேமராவில் பதிவாகியுள்ளது.

SG Road Vigilante என்ற பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட டாஷ்போர்டு கேமரா காணொளியின்படி, இந்த சம்பவம் நவம்பர் 3 அன்று மதியம் 3:40 மணிக்கு நடந்துள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு தீபாவளி நன்கொடை – இந்திய ஊழியர்களுக்கு விருப்பமான பொருட்கள் திரட்டல்

ஜீப்ரா கிராசிங்கில் கடந்து சென்ற சைக்கிள் ஓட்டி மீது சிவப்பு நிற டாக்சி ஒன்று மோதியதை காணொளி மூலம் காணமுடிகிறது.

மோதிய பிறகு, சைக்கிள் ஓட்டுநர் கிராசிங்கின் மறுபுறத்தில் உள்ள புல்வெளியில் கீழே பறந்து விழுவதையும் காணமுடிகிறது.

இதில் சைக்கிள் ஓட்டிக்கு பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

உணவங்காடி நிலையங்களில் அதிரடி சோதனை: விதிகளை மீறிய 76 பேர் சிக்கினர்