பாடகி டெய்லர் ஸ்விஃப்ட் நிகழ்ச்சியில் காதலை வெளிப்படுத்திய ஜோடிகள்!

பாடகி டெய்லர் ஸ்விஃப்ட் நிகழ்ச்சியில் காதலை வெளிப்படுத்திய ஜோடிகள்!
Photo: TikTok Video

 

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாடகியும், பாடல் ஆசிரியருமான டெய்லர் ஸ்விஃப்ட் (Taylor Swift’s), கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சிங்கப்பூருக்கு வருகைத் தந்துள்ளார். வரும் மார்ச் 09- ஆம் தேதி வரை சிங்கப்பூரில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள அவர், சிங்கப்பூரில் உள்ள தேசிய விளையாட்டு அரங்கத்தில் (Singapore National Stadium) நடைபெறும் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தவிருக்கிறார்.

புதிய E Pass வேலை அனுமதிக்கு சம்பளம் உயர்வு – 2025 முதல் அமல்

நிகழ்ச்சிகள் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மார்ச் 02- ஆம் தேதி முதல் மார்ச் 04- ஆம் தேதி வரை நடந்த கலை நிகழ்ச்சியில், பாடகி டெய்லர் ஸ்விஃப்ட் தன் பாணியில் பாடல்களைப் பாடி, ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

அரங்கம் முழுவதும் இளைஞர்கள், இளம் பெண்கள் என கூட்டம் நிரம்பி வழிந்த நலையில், ஏராளமான ஜோடிகள் மோதிரம் அணிந்து தங்களது காதலை வெளிப்படுத்தி, உற்சாகமடைந்தனர். இளைஞர்கள் தனது காதலி முன் தரையில் மண்டியிட்டு, தனது காதலியின் விரல் மோதிரம் அணிவித்து காதலைக் கூற, அருகில் இருந்தவர்களோ கூச்சலிட்டும், வாழ்த்தும் தெரிவித்தும் காதல் ஜோடிகளை உற்சாகப்படுத்தினர்.

ஒர்க் பெர்மிட், S Pass அனுமதி உடைய வெளிநாட்டு ஊழியர்களுக்காக வரவுள்ள மாற்றங்கள்

பாடகி டெய்லர் ஸ்விஃப்ட் நிகழ்ச்சியில், காதல் ஜோடிகள் தங்களது காதலை வெளிப்படுத்தும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. வரும் மார்ச் 07- ஆம் தேதி முதல் மார்ச் 09- ஆம் தேதி வரை நடைபெறும் இரண்டாம் கட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பாடகி டெய்லர் ஸ்விஃப்ட்டின் பாடல்களைக் கேட்க, ஏராளமானோர் ஆர்வம் காட்டி வரும் நிலையில், அதற்கான டிக்கெட் முன்பதிவு ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாக தகவல் கூறுகின்றனர்.