உணவகங்களில் சாப்பிட செல்வோர் கண்டிப்பாக இதை பின்பற்ற வேண்டும் – வெளியான விதிகள்

Tekka Centre
Tekka Centre Google Street View

தேக்கா நிலைய உணவக அங்காடி (Hawker Centre) வெளியே வாடிக்கையாளருக்கும், அமலாக்க அதிகாரிகளுக்கும் இடையே நடந்த வாக்குவாத சம்பவத்தை தொடர்ந்து NEA சில விதிகளை தெளிவுப்படுத்தியது.

அதாவது, மேசையை விட்டு செல்லும் போது கண்ணாடி கப்புகள் மற்றும் குளிர்பான கேனை சுத்தம் செய்யாததற்காக அந்த ஆடவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு இனி சிரமம் இருக்காது.. சட்டவிரோத லாரி சேவைக்கு குட்பை

குறிப்பிடப்பட வேண்டியவை:

உணவு அருந்தும் நபர்கள் சாப்பிட்ட பிறகு மேசைகளைத் துடைக்க வேண்டிய அவசியமில்லை.

இருப்பினும், மேசைகளில் அல்லது அதைச் சுற்றி எந்தவித குப்பைகளையும் விட்டுச் செல்லக்கூடாது என்பதை NEA நினைவூட்டியது.

  • காகித துடைப்பான் (tissues)
  • ஈரமான துடைப்பான்கள் (wet wipes)
  • பான கேன்கள் (drink cans)
  • ஓடுகள் (shells)
  • எலும்புகள் (bones)

மேற்கண்டவையும் குப்பைகளில் அடங்கும்.

தற்செயலாக பானம் அல்லது கிரேவியை மேசையில் கொட்டுவது குற்றமல்ல என்றும் அது கூறியது.

அடுத்தவர்களுக்கு மதிப்பளிக்க வேண்டும்

“நீங்கள் சென்ற பிறகு அதே இடத்தில் உணவருந்த வேறொருவர் வருவார்.”

“ஆகையால் நாம் சுத்தம் செய்யும்போது அது ஒரு மரியாதையாக இருக்கும்.”

எனவே “மேசையை சுத்தமாக வைத்திருக்க ஊக்குவிக்கிறோம்” என்றும் அது குறிப்பிட்டது.

லிட்டில் இந்தியா உணவகத்தில் நடந்த வாக்குவாதம்: வீடியோ வைரல் – உணவருந்த செல்வோருக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட NEA