டெலிகிராம் குழு மூலம் ஆபாச காணொளி, புகைப்படங்கள் பரிமாற்றம் – 4 பேர் மீது குற்றச்சாட்டு

telegram-group-obscene-material-mens-charged
Illustration image

டெலிகிராம் குழு மூலமாக பெற்ற ஆபாசங்களை வைத்திருந்தது அல்லது மற்றவர்களுக்கு அனுப்பியதாக இன்று (ஜூலை 28) நான்கு ஆடவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

“Sam’s lots of CB collection” என்று அழைக்கப்படும் இந்த குழுவில், பாலியல் தொடர்பான காணொளிகள், பெண்களின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் பெண்களின் அனுமதியின்றி எடுக்கப்பட்ட காணொளிகள் ஆகியவை பகிரப்பட்டுள்ளன.

கெய்லாங் பஹ்ருவில் உள்ள நடன ஸ்டுடியோவில் தீ விபத்து

இது தொடர்பாக 28 வயதான வோங் மிங் ஜுன் மீது 11 குற்றச்சாட்டுகளும், 40 வயதான டான் யியோ சோங்கிற்கு இதேபோன்ற ஏழு குற்றச்சாட்டுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

மலேசிய நாட்டை சேர்ந்த ஒருவர் மீதும் மற்றும் சிங்கப்பூர் நிரந்தரவாசி ஒருவர் மீதும் 10 குற்றச்சாட்டுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதே போல, 30 வயதான லிங்கன் அந்தோனி பெர்னாண்டஸுக்கு ஆறு குற்றச்சாட்டுகள் வழங்கப்பட்டன.

நான்கு ஆடவர்களிடம் இருந்தும் மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், தடயவியல் பரிசோதனை மற்றும் விசாரணைகள் மூலம் ஆயிரக்கணக்கான காணொளி கோப்புகள் மற்றும் படங்கள் உள்ளிட்ட ஆபாச பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இன்று குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் பின்னொரு நாள் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர்.

அந்த டெலிகிராம் குழுவுக்கு எதிராக கடந்த 2019ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி காவல்துறைக்கு புகார் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

‘Work Pass’-யைப் பெறுவதற்கு தவறான கல்வித் தகுதியை சமர்ப்பித்த இந்தியர்களுக்கு சிறை!