‘அனைவருக்கும் MaskPure™ AIR+ முகக்கவசம் இலவசமாக வழங்கப்படும்’- தெமாசெக் அறக்கட்டளை அறிவிப்பு!

Photo: Temasek Foundation

சிங்கப்பூரில் உள்ள சிங்கப்பூர்வாசிகள் மற்றும் குடியிருப்பாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தலா ஒன்று வீதம் MaskPure™ AIR+ என்ற மீண்டும் பயன்படுத்தக்கூடிய முகக்கவசம் இலவசமாக வழங்கப்படும் என்று தெமாசெக் அறக்கட்டளை (Temasek Foundation) அறிவித்துள்ளது. இந்த முகக்கவசம் விநியோகம் வரும் ஜனவரி 10- ஆம் தேதி அன்று காலை 10.00 AM மணிக்கு தொடங்கி, வரும் ஜனவரி 23- ஆம் தேதி அன்று இரவு 11.59 PM மணி வரை நடைபெற உள்ளது.

சிங்கப்பூரில் இருந்து வந்தவர் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதி – தொடரும் பரிசோதனை

கூடுதல் முகக்கவசத்துக்கு கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்ய வேண்டும். இதற்கான கடைசி நாள் வரும் ஜனவரி 22- ஆம் தேதி அன்று இரவு 11.59 PM மணி ஆகும்.

குடியிருப்போர் குழு மையங்கள் (Residents’ Committee (RC) Centres), சமூக மையங்கள் / கிளப்புகள் (Community Centres / Clubs- ‘CCs’), சில பேருந்து நிலையங்கள் (Select Bus Interchanges), பிளாசா சிங்கபுரா (Plaza Singapura) தெமாசெக் ஷாப்ஹவுஸ் (Temasek Shophouse) (28 ஆர்ச்சர்ட் சாலை, சிங்கப்பூர் 238832, MRT நிலையத்திற்கு அருகில்) ஆகிய இடங்களில் முகக்கவசத்தை விநியோகம் செய்யும் இயந்திரங்கள் (Vending Machines) வைக்கப்பட்டுள்ளது.

ஆந்திரப் பிரதேசத்தில் மின் விநியோக நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது ‘Sembcorp Energy India’!

M, L என்ற அளவுகளில் மட்டுமே முகக்கவசம் (Mask Sizes L and M) உள்ளது. எனவே, பொதுமக்கள் தங்களுக்கு எந்த அளவு முகக்கவசம் சரியாக உள்ளது என்பதை ஆராய்ந்து, அந்த அளவை குறிப்பிட்டு MaskPure™ AIR+ முகக்கவசத்தைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும், முகக்கவசம் பெறுவதற்கு அரசால் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்றை வைத்திருக்க வேண்டும்.

முகக்கவசத்தைப் பெற அவசரம் காட்ட வேண்டாம் என்று பொதுமக்களை தெமாசெக் அறக்கட்டளை அறிவுறுத்தியுள்ளது.

‘திருச்சி வழியாக திருப்பதி மற்றும் சிங்கப்பூர் இடையே விமான சேவை’- இண்டிகோ ஏர்லைன்ஸ் அறிவிப்பு!

இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு 1800- 738- 2000 என்ற தெமாசெக் அறக்கட்டளையின் தொலைபேசி எண்ணை அழைக்கலாம் (அல்லது) staymasked@temasekfoundation.org.sg என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம் (அல்லது) +65 8484 6309 என்ற வாட்ஸ் ஆப் எண்ணை தொடர்புக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், https://stayprepared.sg/staymasked/ என்ற இணையதள பக்கத்திற்கு சென்று முகக்கவசம் குறித்த முழு தகவல்களை அறிந்துக் கொள்ளலாம்.