சிங்கப்பூரில் ஏப்ரல் 12 முதல் ஆல்கஹால் இல்லாத இலவச கிருமிநாசினி விநியோகம்..!

Temasek Foundation Free hand sanitiser
Temasek Foundation/YouTube

ஒவ்வொரு வீட்டுக்கும் வரும் ஏப்ரல் 12 முதல் 500 மில்லி லிட்டர் இலவச ஆல்கஹால் இல்லாத கிருமிநாசினி சானிடைசர் வழங்கப்படும் என்று Temasek அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

பேஸ்புக் பதிவில் Temasek அறக்கட்டளை, ஏப்ரல் 12 முதல் ஏப்ரல் 25 வரை தீவு முழுவதும் 108 தானியங்கி இயந்திரங்களில் இருந்து கிருமிநாசினியை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் கூறியுள்ளது.

பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட வெளிநாட்டு ஊழியருக்கு சிறை, அபராதம்!

சமூக நிலையங்கள் அல்லது மன்றங்கள், ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள Temasek ஷாப்ஹவுஸில் உள்ள தானியங்கி இயந்திரங்களில் அதனை பெற்றுக்கொள்ளலாம்.

இந்த இலவச கிருமிநாசினியை உள்ளூர் நிறுவனமான Klenco தயாரிக்கிறது.

குடியிருப்பாளர்கள் தங்கள் சொந்த பாட்டில்களை எடுத்துவர வேண்டும். ஒவ்வொரு குடியிருப்பாளரும் இரண்டு பாட்டில்கள் வரை கொண்டு வரலாம்.

அந்த பாட்டில்களின் அதிகபட்ச உயரம் 23cm மற்றும் அகலம் 11cm வரை இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

S Pass, work permit உடைய வெளிநாட்டு ஊழியர்களுக்கான தீர்வை தனிமைப்படுத்தப்படும் காலத்தில் தள்ளுபடி..!