‘தாய்லாந்து, கம்போடியா உள்ளிட்ட ஐந்து நாடுகளுக்கு ‘VTL’ விமான சேவை’- சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவிப்பு!

Photo: Singapore Airlines Official Facebook Page

கொரோனா தடுப்பூசியை முழுமையாகச் செலுத்திக் கொண்டவர்களுக்கான சிறப்பு பயணத் திட்டத்தின் (Vaccinated Travel Lane- ‘VTL’) கீழ் துருக்கி, மாலத்தீவு, கம்போடியா, இலங்கை, ஃபிஜி ஆகிய ஐந்து நாடுகளுக்கு விமான சேவை வரும் டிசம்பர் 16- ஆம் தேதி முதல் தொடங்குகிறது. ‘VTL’ திட்டத்தின் கீழ் தாய்லாந்து நாட்டிற்கான விமான சேவை வரும் டிசம்பர் 14- ஆம் தேதி தொடங்கும் என்று சிங்கப்பூர் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் சிங்கப்பூருக்கு வரும் பயணிகள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள தேவையில்லை. அதேபோல், சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ள கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசிய பிரதமர் இன்று சிங்கப்பூருக்கு வருகிறார்!

அத்துடன் ‘VTL’ திட்டத்தின் கீழ் சிங்கப்பூருக்கு வரும் பயணிகள், சிங்கப்பூருக்கு புறப்படுவதற்கு முன்னதாக, ‘VTL’ பாஸுக்கு விண்ணப்பிக்க வேண்டும். யார் யாரெல்லாம் இந்த பாஸுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://safetravel.ica.gov.sg/vtl/requirements-and-process என்ற இணையதளத்தை அணுகலாம்.

இந்த நிலையில், துருக்கி, தாய்லாந்து, மாலத்தீவு, கம்போடியா, இலங்கை ஆகிய ஐந்து நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொண்டவர்களுக்கான சிறப்பு பயணத் திட்டத்தின் (Vaccinated Travel Lanes- ‘VTL’) கீழ் விமான சேவையைத் தொடங்குவதாக அறிவித்துள்ள சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், அதற்கான பயண அட்டவணையை வெளியிட்டு, டிக்கெட் முன்பதிவையும் தொடங்கியுள்ளது.

“கூடுதலாக முன்னேறுவதற்கு முன் மீண்டும் சில படிகள் பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்” – பிரதமர் லீ

அதன்படி, டிசம்பர் 16- ஆம் தேதி முதல் SQ153 என்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ‘VTL’ விமானம் கம்போடியா நாட்டின் தலைநகர் புனோம் பென்னில் (Phnom Penh)இருந்து சிங்கப்பூருக்கு தினமும் இயக்கப்படும். இந்த விமான சேவை டிசம்பர் 16- ஆம் தேதி முதல் அடுத்தாண்டு மார்ச் 26- ஆம் தேதி வரை தொடரும்.

டிசம்பர் 16- ஆம் தேதி முதல் SQ437 என்ற ‘VTL’ விமானம் மாலத்தீவில் இருந்து சிங்கப்பூருக்கு இயக்கப்படும். வாரத்தில் புதன்கிழமை, வியாழக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய மூன்று நாட்களுக்கு விமானங்கள் இயக்கப்படும். இந்த விமான சேவையானது டிசம்பர் 16- ஆம் தேதி முதல் அடுத்தாண்டு மார்ச் 24- ஆம் தேதி வரை தொடரும்.

பயணிகளும் வருகையின்போது ART விரைவு சோதனை கட்டாயம்

டிசம்பர் 16- ஆம் தேதி முதல் SQ469 என்ற ‘VTL’ விமானம் இலங்கை நாட்டின் தலைநகர் கொழும்புவில் இருந்து சிங்கப்பூருக்கு தினசரி இயக்கப்படும். இந்த விமான சேவையானது டிசம்பர் 16- ஆம் தேதி முதல் அடுத்தாண்டு மார்ச் 27- ஆம் தேதி வரை தொடரும்.

டிசம்பர் 14- ஆம் தேதி முதல் பாங்காக்கில் இருந்து சிங்கப்பூருக்கு, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் வாரத்திற்கு 10 விமானங்களை இயக்கவுள்ளது. இதில் SQ707 என்ற விமானம் தினசரி விமானம் ஆகும். இந்த விமானம் வாரத்தில் ஏழு நாட்களுக்கும் இயக்கப்படும். SQ705 என்ற விமானம் பாங்காக்கில் இருந்து சிங்கப்பூருக்கு வாரத்திற்கு மூன்று நாட்கள் இயக்கப்படும். அதாவது, திங்கள்கிழமை, புதன்கிழமை, சனிக்கிழமை ஆகிய மூன்று நாட்களில் விமானங்கள் இயக்கப்படும்.

மகனுக்கு விலையுயர்ந்த போன் வாங்கிக்கொடுத்த சிங்கப்பூரில் பணிபுரியும் தந்தை: அதனால் ஏற்பட்ட விபரீதம் – மகன் தற்கொலை

டிசம்பர் 16- ஆம் தேதி முதல் துருக்கி நாட்டின் தலைநகர் இஸ்தான்புலில் (Istanbul) இருந்து சிங்கப்பூருக்கு வாரத்திற்கு மூன்று நாட்கள் விமானங்கள் இயக்கப்படும். SQ391 என்ற விமானம் திங்கள்கிழமை, வியாழக்கிழமை, சனிக்கிழமை ஆகிய மூன்று நாட்கள் இயக்கப்படும். இந்த விமான சேவையானது டிசம்பர் 16- ஆம் தேதி முதல் அடுத்தாண்டு மார்ச் 26- ஆம் தேதி வரை தொடரும். இவ்வாறு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

விமான சேவை தொடர்பான டிக்கெட் முன்பதிவு, பயண விவரங்கள் தொடர்பான மேலும் விவரங்களுக்கு https://www.singaporeair.com/en_UK/in/home#/book/bookflight அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.