தைப்பூசம்- ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு!

Photo: Sri Thendayuthapani Temple

சிங்கப்பூரில் நாளை (18/01/2022) தைப்பூசத் திருவிழா நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில், டேங்க் ரோட்டில் உள்ள பிரசித்திப் பெற்ற ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயில் நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

சீனப் புத்தாண்டின் முதல் நாள் பிப்ரவரி 1 அன்று 133 FairPrice கடைகள் தொடர்ந்து செயல்படும்

அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தைப்பூசத் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் கோவிட்- 19 சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு செய்யப்பட்டு வருகிறது. இந்த வருடம் தைப்பூச நாள் வரை முழு தடுப்பூசிப் போட்டுக் கொண்ட பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். தற்போதுள்ள அரசாங்க விதிமுறைகளின்படி பல குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செயல்படுத்தப்படும்.

பக்தர்கள் பின்வரும் வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

1.பால் குடம் மற்றும் பொது தரிசனத்திற்கு முன்பதிவு கட்டாயமாகும்.

2. கோயிலால் முன்பே தயாரிக்கப்பட்ட பால் குடம் மட்டுமே அனுமதிக்கப்படும். ஒவ்வொரு பால்குடம் எடுக்கும் பக்தரும், தங்களுடன் கூடுதலாக ஒரு நபரைப் பதிவு செய்து அழைத்து வரலாம்.

3. பொது தரிசனம் காண விரும்பும் பக்தர்கள் தாங்கள் உட்பட, ஐவருக்கு முன்பதிவு செய்துக் கொள்ளலாம்.

4. பதிவு செய்த நபர்கள் மட்டுமே கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.

5. கோயிலுக்குள் நுழைவதற்கு முன்பு Trace Together சாதனம் அல்லது செயலி (Token APP) வழியாக பாதுகாப்பான நுழைவில் (Safe Entry) தங்களின் வருகையைப் பதிவு செய்ய வேண்டும். கோயிலுக்குள் பக்தர்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டி இருப்பதால் தரிசனத்துக்கு காத்திருக்க நேரிடலாம்.

6.முடிக் காணிக்கை செலுத்த விரும்பும் பக்தர்கள் https://sttemple.com/ மூலமாக முன்பதிவு செய்துக் கொள்ளலாம். தைப்பூச தினம் (ஜனவரி 18, 2022), அதற்கு முந்தைய தினம் இன்று (17/01/2022) ஆகிய தினங்களில் முடிக் காணிக்கை செலுத்த இயலாது.

“ஜிஎஸ்டி உயர்வு அடுத்தாண்டு ஜன.1- ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வரலாம்”- பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!

7.ஜனவரி 13- ஆம் தேதி முதல் ஜனவரி 17- ஆம் தேதி காலை வரை பக்தர்கள் அர்ச்சனை ரசீதுகளை சந்நிதி முன்பு உள்ள அர்ச்சனை பெட்டிகளில் வைத்து விட்டு ஜம்பு விநாயகருக்கும், தெண்டாயுபாணி, சிவன் மற்றும் மீனாட்சி அம்மனுக்கு மட்டும்அர்ச்சனைக்குள்ள தீபம் காண்பிக்கப்பட்ட பிறகு அங்கு வைக்கப்பட்டிருக்கும் காளாஞ்சிப் பிரசாதத்தைப் பெற்றுக் கொள்ளலாம். மற்ற சுவாமிகளுக்கு அர்ச்சனை தீபம் கிடையாது.

8. ஜனவரி 13- ஆம் தேதி முதல் ஜனவரி 17- ஆம் தேதி காலை வரை, கூட்டத்தைக் கருத்தில் கொண்டு இதுவரைப் பதிவு செய்யப்பட்ட சஹஸ்ரநாமங்கள் தவிர புதிதாக பதிதல் கிடையாது.

9. ஜனவரி 13- ஆம் தேதி முதல் ஜனவரி 18- ஆம் தேதி வரை தைப்பூசம் வரை பக்தர்கள் விளக்கு ஏற்றி வைக்க அனுமதி இல்லை.

10. புனர்பூசம் இன்று (17/01/2022) மாலை அருள்மிகு தண்டாயுதபாணி கோயிலில் ஊஞ்சல் நிகழ்ச்சிகளுக்கு ஜனவரி 15- ஆம் தேதி சனிக்கிழமை அன்று காலை 08.00 மணி முதல் முன்பதிவு செய்துக் கொள்ளலாம். முன்பதிவு செய்துக் கொண்ட பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர்.

11. புனர்பூசம் இன்று (17/01/2022) மாலை ஊஞ்சல் நிகழ்ச்சிக்கு பிறகே மற்ற பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர்.

12. முதியவர்கள், குழந்தைகள், இயலாதோர் ஆகிய அனைவரும் வீட்டிலிருந்தே இறைவனை வழிபடும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். தைப்பூசப் பூஜைகள் https://sttemple.com/ என்ற இணையப்பக்கத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

13. அனைத்து பக்தர்களும் எல்லா நேரங்களிலும் பாதுகாப்பான இடைவெளி மற்றும் மேலாண்மை நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்திய புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான கோலப்போட்டியை நடத்தியது ‘Lisha’!

மேலும் விவரங்களுக்கு https://sttemple.com/ என்ற இணையதள பக்கத்தை அணுகலாம். பக்தர்கள் அனைவரும் தங்களின் நல்லாதரவையும், ஒத்துழைப்பையும் தந்து உதவிட வேண்டுகிறோம். உங்கள் அனைவரின் புரிந்துணர்வுக்கும் நன்றி! அனைவருக்கும் அருள்மிகு தெண்டாயுதபாணியின் திருவருள் கிடைத்திடப் பிரார்த்திக்கின்றோம் நன்றி!”. இவ்வாறு கோயில் நிர்வாகத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.