பாரா ஒலிம்பிக்கில் ஐந்து முறை தங்கம் வென்ற சிங்கப்பூர் வீராங்கனைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அரசு!

Photo: Singapore Prime Minister Official Facebook Page

சிங்கப்பூர் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாள்தோறும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு புதிய மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதேபோல், திருத்தியமைக்கப்பட்ட சட்ட மசோதாக்களும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு, அந்தந்த துறைச் சார்ந்த அமைச்சர்கள் விளக்கமளித்து வருகின்றன.

பாரா ஒலிம்பிக்கில் ஐந்து முறை தங்கம் வென்ற சிங்கப்பூர் வீராங்கனைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அரசு!

அந்த வகையில், நேற்றைய (05/10/2021) கூட்டத்தொடரின் போது, ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற சிங்கப்பூர் வீரர், வீராங்கனைகளை கௌரவிக்கும் தீர்மானத்தை கலாச்சார, சமூக, இளையர் துறை அமைச்சர் எட்வின் டோங் முன்மொழிந்தார். அப்போது பேசிய அமைச்சர் எட்வின் டோங், “மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் நீச்சல் போட்டியில், ஐந்து முறை தங்கம் பதக்கங்களை வென்ற யிப் பின் சியூ-விற்குப் (Yip Pin Xiu) ‘ஊக்கமளிக்கும் சாதனைக்கான அதிபர் விருது’ என்ற புதிய விருது வழங்கப்பட்டு, சிறப்பிக்கப்படுவார். பாரா ஒலிம்பிக், ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களைப் பெறும் சிங்கப்பூர் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் பரிசுத்தொகையை உயர்த்தி வழங்குவது குறித்து அரசு ஆராய்ந்து வருகிறது” எனத் தெரிவித்தார்.

கடந்த சில மாதங்களுக்கு பிறகு நடந்த டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற சிங்கப்பூர் நீச்சல் வீராங்கனை இரண்டு தங்கப் பதக்கங்களைக் கைப்பற்றினார். இதையடுத்து, அவர் பெற்ற ஒவ்வொரு தங்கப் பதக்கத்திற்க்கும் 2,00,000 சிங்கப்பூர் டாலர் பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளது. அதேபோல், ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று தங்கம் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு ஒரு மில்லியன் சிங்கப்பூர் டாலர் பரிசுத்தொகையாக வழங்கப்படுகிறது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு உடல்நல ஆரோக்கியம் போலவே “மனநல ஆரோக்கியம்” முக்கியம்

இதனிடையே, சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “நடப்பாண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக், பாரா ஒலிம்பிக் போட்டிகளில் சிங்கப்பூர் கொடியை உயரப் பறக்கவிட்ட சிங்கப்பூர் அணியின் குழுவினரை எண்ணிப் பெருமைக் கொள்கிறேன். உலகின் சிறந்த விளையாட்டு வீரர்களுடன் போட்டியிடுவது எளிதான ஒன்றல்ல. அதற்கு மன வலிமையையும், கடின உழைப்பும், திறமையும் தேவை” என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், யிப் பின் சியூவுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.