சிங்கப்பூரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட “கிரேட் இந்தியன் உணவுத் திருவிழா” – தள்ளுவண்டி கடையில் ஆப்பம், பிரியாணி

The Great Indian Food Festival Singapore
Image Courtesy: Canva

சிங்கப்பூரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட “கிரேட் இந்தியன் உணவுத் திருவிழா” மீண்டும் அதிகாரபூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது.

பர்ச் சாலையில் நடைபெறும் உணவுத் திருவிழாவில் பொதுமக்கள் கலந்துகொண்டு சுவையான உணவுகளை உண்டும் மற்றும் நிகழ்ச்சிகளை கண்டும் மகிழலாம்.

சிங்கப்பூரில் வசிக்கும் இந்தியர்களுக்கு குட் நியூஸ்.. சிங்கப்பூரில் இருந்து மலேசியா.. படையெடுக்கும் கூட்டம்

இந்திய உணவுகள் மட்டுமல்லாமல், அதன் கலாச்சாரத்தின் மையத்தை வெளிப்படுத்தும் சிறந்த அனுபவத்தை வழங்கும் வகையில் அங்கு ஏராளமான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்திய உணவுகளான ஆப்பம், பிரியாணி போன்றவை அங்கு தள்ளுவண்டிகளில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்டுகிறது.

நேற்று நடந்த அதிகாரபூர்வ தொடங்க விழாவில் மனிதவள அமைச்சர் டான் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

அப்போது தமிழ்நாட்டில் பாரம்பரிய நாட்டுப்புற கலைஞர்களின் நிகழ்ச்சியும் சிறப்பாக நடந்தது.

கடந்த நவம்பர் 27 முதல் தொடங்கப்பட்ட இந்த திருவிழா, இந்த மாதம் டிசம்பர் 10 வரை நடைபெறும்.

ஒவ்வொரு நாளும் காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை இந்த திருவிழா நடைபெறும்.

சிங்கப்பூரில் ஆப்பிள் சாதனங்கள் பயன்படுத்துவோரின் கவனத்திற்கு