சிங்கப்பூர்-UAE உறவை பிரதிபலிக்கும் வகையில் புர்ஜ் கலீபாவில் சிங்கப்பூர் தேசியக் கொடிக் காட்சி..!

The national flag of Singapore light up in Burj Khalifa
The national flag of Singapore light up in Burj Khalifa (PHOTO: Singapore Embassy in Abu Dhabi and Consulate-General in Dubai/Facebook)

சிங்கப்பூரின் 55ஆவது தேசிய தினம் நேற்று கொண்டாடப்பட்டது, அதை போற்றும் விதமாக உலகின் மிக உயர்ந்த கட்டடமான புர்ஜ் கலீபாவில் சிங்கப்பூர் தேசியக் கொடி காட்சிப்படுத்தப்பட்டது.

சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் 35 ஆண்டுகால அரச உறவை பிரதிபலிக்கும் வகையில் இந்த ஒளியூட்டு நிகழ்வு அரங்கேறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சமூக ஊடகங்களில் வைரலாகும் தேசிய தினத்தன்று எடுக்கப்பட்ட காணொளி..!

அதே போல அமீரகத்தின், அபுதாபியில் உள்ள ADNOC நிறுவனத்தின் தலைமையகத்திலும் சிங்கப்பூரின் தேசியக் கொடி காட்சிப்படுத்தப்பட்டது.

எதிர்வரும் ஆண்டுகளில், ஐக்கிய அரபு அமீரகத்துடன் நெருக்கமான உறவு, மற்றும் தொடர்ந்து பணியாற்ற எதிர்நோக்குவதாக அபுதாபியில் அமைந்துள்ள சிங்கப்பூர் தூதரகம் தெரிவித்துள்ளது.

HAPPY BIRTHDAY SINGAPORE! CELEBRATING 35 YEARS OF SINGAPORE-UAE TIES!To mark Singapore’s 55th National Day on 9th…

Posted by Singapore Embassy in Abu Dhabi and Consulate-General in Dubai on Sunday, August 9, 2020

ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சகம் ADNOC குழுமம் மற்றும் Emaar Dubai ஆகியவற்றிக்கு சிங்கப்பூர் தூதரகம் நன்றி தெரிவித்துள்ளது,

இந்த ஒளியூட்டு சிங்கப்பூரின் தேசிய தின கொண்டாட்டங்களை மேலும் சிறப்பானதாக்கியதாக அபுதாபியில் அமைந்துள்ள சிங்கப்பூர் தூதரகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : தேசிய தினத்தன்று பிறந்த முதல் குழந்தைகளை வரவேற்ற சிங்கப்பூர்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg