சிங்கப்பூரில் மீண்டும் திறக்கப்படும் திரையரங்குகளில் புதிய நடைமுறைகள் பின்பற்றப்படும்..!

Golden Village claims that visitors who are physically tested are not going to be allowed inside 37.5 degrees Celsius.
Golden Village claims that visitors who are physically tested are not going to be allowed inside 37.5 degrees Celsius. (Photo: straitstimes)

COVID -19 கிருமிப் பரவலைத் தடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்தும் நாடுகளைப் போலவே சிங்கப்பூரிலும் திரையரங்கு போன்ற பொழுதுபோக்கு கூடங்கள் பழைய வழக்கங்களைக் கொண்டிருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்ட பின்னர் புதிய நடைமுறைகள் பின் பற்ற வேண்டி இருக்கும். ஒன்றாக சேர்ந்து படம் பார்க்க செல்பவர்கள் திரையரங்குகளில் சமூக இடைவெளிவிட்டு அமர்வதும், திரையரங்குகளில் நுழையும்போது பார்வையாளர்களுக்கு உடல் வெப்பநிலை சோதிக்கப்படுத்துவதும் இனி கடை பிடிக்க வேண்டியவைகளில் சில என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் புதிதாக 570 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!

ஷா தியேட்டர்ஸ், கோல்டன் வில்லேஜ், தி புரொஜெக்டர் போன்ற திரையரங்கு நடத்துனர்கள் அரசாங்க அதிகாரிகளுடன் திரையரங்குகள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டதும் புதிய நடைமுறைகளை அறிமுகம் செய்வது குறித்து கலந்து பேசி வருவதாக தெரிவித்துள்ளனர்.

திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டதும் தொழில் ரீதியாக கடைப்பிடிக்கப்பட வேண்டுய நெறிமுறைகள் குறித்து தகவல் தொடர்பு ஊடகமேம்பாட்டு ஆணையத்துடனும், சிங்கப்பூரில் உள்ள மற்ற திரையரங்கு நடத்தட்டுநர்களுடனும் ஆலோசித்து வருகிறோம் என்று தி புரொஜெக்டர் திரையரங்கு குழுமத்தின் “பொது மேலாளர் பிரஷாந்த் சோமசுந்தரம்” தெரிவித்துள்ளார்.

மூடப்பட்ட திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டதும் அவற்றினுள் சமூக இடைவெளி விட்டு அமர்வதையும், உள்ளே நுழையும்போது உடல்வெப்பநிலை சோதிக்கப்படுவதையும் கட்டாயமாக்க ஷா தியேட்டர்ஸ் ஆதாயமாக்கி வருகிறது.

அதே போல் கோல்டன் வில்லேஜ், உடல்வெப்பநிலை சோதிக்கப்படும் பார்வையாளர்களுக்கு 37.5 டிகிரி செல்ஸியஸ் உள்ளவர்களை உள்ளே அனுமதிக்க போவதில்லை என்று கூறிவருகிறது.

முன்பதிவு செய்யப்பட்ட பார்வையாளர்கள் நுழைவாயிலில் சோதிக்கப்பட்டு உள்ளே செல்ல மறுக்கப்பட்டால் அவர்களது கட்டணம் திருப்பித்தரப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: சிங்கப்பூர் கிளெமென்டி HDB பிளாக்கில் தீ விபத்து – ஒருவர் மருந்துவமனையில் அனுமதி..!