பிரதமர் லீ மீது அவதூறு வழக்கு.. S$133,000 நஷ்ட ஈடு வழங்க உத்தரவு!

(PHOTO: The Japan Times)

பிரதமர் லீ சியன் லூங் சம்பந்தமாக இணையச் செய்தியை முகநூலில் வெளியிட்ட லியோங் ஸீ ஹியன் நஷ்ட ஈடாக பிரதமருக்கு S$133,000 வழங்க வேண்டும் என்று உயர் நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தி கவரேஜ் இணையத்தளமானது மலேசியாவின் 1எம்டிபி பணமோசடியில் பிரதமர் லீ யை சம்பந்தப்படுத்தும் பொய்யான செய்தி ஒன்றை வெளியிட்டிருந்ததாக கூறப்பட்டது.

சிங்கப்பூரில் தளர்த்தப்படும் கட்டுப்பாடுகள் – ஊழியர்களுக்கு….

இதன் உண்மை நிலையை ஆராயாமல் திரு லியோங் அச்செய்தியை தன்னுடைய முகநூல் பக்கத்தில் பகிர்ந்துகொண்டுள்ளதாக நீதிபதி தமது தீர்ப்பில் கூறியுள்ளார்.

மேலும், அவதூறு கூறியதற்காக அவர் மன்னிப்பு கேட்கவும் மறுத்ததால் அவரின் தீய எண்ணம் தெரிவதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.

அவதூறு வழக்கில் S$150,000ஐ இழப்பீடாக பிரதமர் லீயின் வழக்கறிஞர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இது போன்ற அவதூறு வழக்குகளில் இத்தொகை வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை நீதி மன்றத்திற்கு வந்த அவதூறு வழக்குகளில் இந்த வழக்கானது சற்று மாறுபட்டு இருப்பதாக நீதிபதி கூறியுள்ளார்.

இது குறித்து பிரதமருக்கு எந்தவொரு கருத்தும் இல்லை என்று பிரதமரின் ஊடகச் செயலாளர் சாங் லி லின் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு தொரடர்புடைய அனைத்தும் நீதிபதியால் முடிவெடுக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தூங்கிக் கொண்டிருந்த மனைவியின் சகோதரியை பலமுறை பாலியல் ரீதியாக துன்புறுத்திய ஆடவருக்கு சிறை