‘தீமிதித் திருவிழா 2023’- ஸ்ரீ மாரியம்மன் கோயில் களைகட்டியது!

Sri Mariyamman temple Firewalking Ceremony

 

சிங்கப்பூரில் உள்ள சவுத் பிரிட்ஜ் சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீ மாரியம்மன் கோயில் (Sri Mariamman Temple). இது சிங்கப்பூரின் ஆக பழமையான கோயில் ஆகும். இந்த கோயிலில், ஆண்டுதோறும் தீமிதித் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், நடப்பாண்டிற்கான் தீமிதித் திருவிழா, கடந்த ஆகஸ்ட் மாதம் 21- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சிங்கப்பூரில் வேலைபார்க்கும் வெளிநாட்டினருக்கு மனிதவள அமைச்சகம் எச்சரிக்கை

தீமிதித் திருவிழாவை முன்னிட்டு, நாள்தோறும் மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற்று வருகிறது. விழாவின், முக்கிய நிகழ்வான வரும் நவம்பர் 05- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று தீமிதித் திருவிழா கோலாகலமாக நடைபெறவுள்ளது. தீக்குழியில் இறங்கி, தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுவதற்காக, ஏராளமான பக்தர்கள் முன்பதிவுச் செய்துள்ளனர்.

தீமிதித் திருவிழாவையொட்டி, ஸ்ரீ மாரியம்மன் கோயில் களைகட்டியது. திருவிழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பக்தர்களின் வசதிக்காக, கோயில் நிர்வாகம் மற்றும் இந்து அறக்கட்டளை வாரியம் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது. கோயில் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட கோவிட்-19 தடுப்பூசியைப் போட்டுக்கொண்டார் பிரதமர் லீ – பொதுமக்களும் போட்டுக்கொள்ள ஊக்குவிப்பு

அனைத்து நிகழ்வுகளுடன் வரும் நவம்பர் 09- ஆம் தேதி அன்று தீமிதித் திருவிழா நிறைவுப் பெறுகிறது.