சிங்கப்பூர் தமிழர்களுக்கு சிறப்பு விமானம் குறித்து சன் நியூஸ் சிறப்பு தொகுப்பு..!

Vande Bharat Mission
Vande Bharat Mission flight

வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களை சிறப்பு விமானம் மூலம் மீட்பத்தில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதாக புகார்கள் வருகின்றன என்று சன் நியூஸ் குறிப்பிட்டுள்ளது.

இதுவரை சிங்கப்பூரிலிருந்து சென்னை மற்றும் திருச்சிக்கு ஒரு சிறப்பு விமானம் கூட இயக்கப்படாததால் கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் நாடு திரும்ப முடியாமல் தவிக்கின்றனர் என்று சன் நியூஸ் தனது பிரத்தியேக கட்டுரையில் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் இறுதியில் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானச்சேவையை இந்தியா நிறுத்தியது. இதனால் வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களை “வந்ததே பரத்” திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் மூலம் மத்திய அரசு மீட்டுவருகிறது.

அதன் படி முதல் கட்டமாக அமெரிக்கா, ரஷ்யா, மலேசியா, துபாய் உள்ளிட்ட 12 நாடுகளிலிருந்து 64 விமானங்கள் மூலம் 15000 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் புதிதாக 793 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!

இரண்டாம் கட்டமாக மே 16 முதல் 22ம் தேதி வரை 31 நாடுகளுக்கு சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்த பட்டியலில் சிங்கப்பூர் இடம் பெற்றிருந்தாலும் உத்திரபிரதேசம், தெலுங்கானா, குஜராத் மற்றும் பஞ்சாப் மாநிலத்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது என்று சன் நியூஸ் குறிப்பிட்டுள்ளது.

 

இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு விமானச்சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தும், அதிகம் தமிழர்கள் வசிக்கும் சிங்கப்பூரிலிருந்து தமிழகத்திற்கு ஏன் இன்னும் விமான சேவை தொடந்தவில்லை என்றும், வேலையிழந்து 2 மாதங்கள் ஆகியும் விசா முடிந்த நிலையில் தமிழகம் திரும்ப முடியாமல் வருமானமின்றி தவிப்பதாகவும் சிங்கப்பூரில் வசிக்கும் தமிழரான திரு. சுப்பிரமணியன் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

Source : Sun News

இதையும் படிங்க: COVID-19: ஊழியர் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் 750 பேர் பாதிப்பு..!