COVID-19: ஊழியர் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் 750 பேர் பாதிப்பு..!

COVID-19: 750 patients are work permit holders residing in foreign worker dormitories
COVID-19: 750 patients are work permit holders residing in foreign worker dormitories

சிங்கப்பூரில் நேற்றைய (மே 14) நிலவரப்படி, புதிதாக 752 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

அதாவது தற்போதுவரை, சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 26,098ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் 48 ஆண்டு கால வரலாற்றில் காணாத நட்டத்தை சந்தித்துள்ளது..!

புதிய சம்பவங்கள்

புதிய சம்பவங்களின், ஊழியர் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் 750 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதிய சம்பவங்களில் சமூக அளவில் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து வந்த சம்பவங்கள் எதுவும் இல்லை.

அதே போல் தங்கும் விடுதிகளுக்கு வெளியே வசிக்கும் வேலை அனுமதி வைத்திருப்பவர்களிடையே புதிய சம்பவங்கள் எதுவும் இல்லை.

புதிய குழுமம்

சிங்கப்பூரில், 2 பெருமாள் ரோடு புதிய நோய் பரவல் குழுமமாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக MOH தெரிவித்துள்ளது.

குணமடைந்தோர்

சிங்கப்பூரில் COVID-19 தொற்றிலிருந்து 1,164 நபர்கள் மருத்துவமனைகள் அல்லது சமூக தனிமைப்படுத்தும் வசதிகளிலிருந்து வீடு திரும்பினர் என்று சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் ஒரே நாளில் 1000-க்கும் மேற்பட்டோர் குணமடைந்தனர்..!