சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் 48 ஆண்டு கால வரலாற்றில் காணாத நட்டத்தை சந்தித்துள்ளது..!

Singapore Airlines posts first annual net loss in 48-year history after COVID-19 cripples demand
Singapore Airlines posts first annual net loss in 48-year history after COVID-19 cripples demand (Photo: SIA)

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தனது 48 ஆண்டு வரலாற்றில், இந்த ஆண்டு நிகர நட்டத்தை வியாழக்கிழமை (மே 14) அறிவித்துள்ளது.

COVID-19 பரவலால் ஏற்பட்ட விமான போக்குவரத்து பாதிப்பு இந்த இழப்புக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் ஒரே நாளில் 1000-க்கும் மேற்பட்டோர் குணமடைந்தனர்..!

SIA குழுமம் மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த 12 மாதங்களுக்கு சுமார் S$212 மில்லியன் நிகர நட்டத்தை அறிவித்துள்ளது.

இது முந்தைய ஆண்டின் அதன் லாபம் S$683 மில்லியன் என இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை சுமார் S$732 மில்லியன் நட்டத்தை சந்தித்துள்ளதாக அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இதே காலகட்டத்தில் S$203 மில்லியன் நிகர லாபத்தை ஈட்டியது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டின் இயக்க லாபம் S$59 மில்லியன் என்றும், இது முந்தைய ஆண்டின் S$1 பில்லியன் ஆக இருந்ததாகவும், அதாவது 94.5 சதவீதம் குறைந்துள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக SIA தனது பெரும்பாலான சேவைகளை குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : “சர்க்யூட் பிரேக்கர்” எனும் அதிரடி நடவடிக்கை தொடங்கியதிலிருந்து குடும்ப வன்முறை அதிகரிப்பு – SPF..!