தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதை பயணிகளுக்கு நற்செய்தி – காத்திருக்கும் நேரம் குறைப்பு

thomson-east-coast-line-stage-3-open-free-rides
LTA

தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதை (TEL) ரயில் நிலையங்களில் நெரிசல் இல்லாத உச்ச நேரங்களில் ரயில்களுக்காக காத்திருக்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

நிலையங்களில் ஒவ்வொரு ஆறு நிமிடங்களுக்கும் ரயில் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போது இருக்கும் ஒன்பது நிமிட இடைவெளியில் இருந்து குறைந்துள்ளது.

பேருந்து ஓட்டுனரை தகாத வார்த்தையில் பேசி, மொபைல் போனை தூக்கி வீசி ரகளை செய்த நபர்

ரயில் பாதையின் மூன்றாம் கட்டம், வரும் நவம்பர் 13 அன்று பயணிகள் சேவைக்காக திறக்கப்படும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

அதே போல, தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதையில் உச்ச நேரங்களில் வரும் ரயில்களுக்கான நேர இடைவெளி ஐந்து நிமிடங்களாக இருக்கும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) கூறியது.

TEL பாதையில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது நேர இடைவெளி மீண்டும் மதிப்பாய்வு செய்யப்படும் என்று ஆணையம் கூறியுள்ளது.

மற்ற MRT வழித்தடங்களில் பொதுவாக காலை 7 மணி முதல் 9 மணி வரையிலான உச்ச நேரங்களில் இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு ஒருமுறை நிலையங்களுக்கு ரயில்கள் வந்து சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயிரக்கணக்கானவர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது Facebook… தொடரும் பணிநீக்கம் – கலக்கத்தில் சாதாரண ஊழியர்கள்