மூன்று பேர் மீது வீட்டில் தங்கும் உத்தரவை மீறியதன் தொடர்பில் குற்றச்சாட்டு..!

சிங்கப்பூரர்கள் மூவர் மீது வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவை மீறியதன் தொடர்பில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) தெரிவித்துள்ளது.

இந்தோனேசியாவின் படாமில் இருந்து சிங்கப்பூர் திரும்பிய பின்னர், மூன்று பேருக்கு 14 நாட்கள் வீட்டிலேயே இருக்க உத்தரவிடப்பட்டது. ஆனால் அவர்கள் தனித்தனியான வழக்குகளில் இந்த உத்தரவுகளை மீறியதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் ஒரே நாளில் ஆக அதிகமானோர் COVID-19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்..!

குரேஷ் சிங் சந்து, அசார் காமிஸ் மற்றும் ஜஹாரி சமத் ஆகிய மூன்று நபர்கள் புதன்கிழமை (மே 13) தொற்று நோய்கள் சட்டம் அல்லது அதன் விதிமுறைகளின் கீழ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.

தொற்று நோய்ச் சட்டத்தின் படி குரேஷ் மீதும், வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவை வேண்டுமென்றே மீறியதன் தொடர்பில் அஸார், ஸஹாரி ஆகிய இருவர் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்கப் போவதில்லை என்று குடிநுழைவுச் சோதனைச் சாவடி ஆணையம் எச்சரித்துள்ளது.

தொற்று நோய்கள் சட்டத்தின் கீழ் உள்ள குற்றங்களுக்கான அபராதம் மற்றும் அதன் விதிமுறைகள் அதிகபட்சம் ஆறு மாத சிறைத்தண்டனையோ, S$10,000 வரை அபராதமோ அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

இதையும் படிங்க : சைனாடவுனில் ஆயுதங்களுடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, அதன் தொடர்பில் மேலும் 9 பேர் கைது..!