சிங்கப்பூரில் வெளியாகவுள்ள ‘துணிவு’ திரைப்படம்- திரையரங்குகளின் பட்டியல்!

Video Crop Image

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘துணிவு’. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை போனி கபூர் தயாரித்துள்ள நிலையில், படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ‘ரெட் ஜெயண்ட் மூவிஸ்’ நிறுவனம் பெற்றுள்ளது. துணிவு படத்தை வெளிநாட்டில் வெளியீடுவதற்கான உரிமையை லைகா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த நபர் கைது!

‘துணிவு’ திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், ஜனவரி 11- ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் படம் வெளியாகவுள்ளது. அதற்கான டிக்கெட் முன்பதிவும் தற்போது தொடங்கியுள்ளது.

Twitter Image

இந்த நிலையில், சிங்கப்பூரில் எத்தனை திரையரங்குகளில் ‘துணிவு’ திரைப்படம் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் அஜித் ரசிகர்கள். இந்நிலையில், ‘துணிவு’ திரைப்படம் சிங்கப்பூரில் எந்தெந்த திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறித்த பட்டியல் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

சிங்கப்பூர் வீராங்கனை 18 வயதில் மரணம் – இந்திய வீராங்கனையுடன் விளையாட இருந்தவருக்கு நேர்ந்த சோகம்!

அதன்படி. சிங்கப்பூரில் Carnival, Cathay, Golden Village, Shaw உள்ளிட்ட 24 திரையரங்குகளில் ‘துணிவு’ திரைப்படம் வெளியாகவுள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.