‘Times’ புத்தகக் கடையின் அறிவிப்பால் வாசகர்கள் அதிர்ச்சி!

'Times' புத்தகக் கடையின் அறிவிப்பால் வாசகர்கள் அதிர்ச்சி!
Photo: Times Bookstores/ Facebook

 

சிங்கப்பூரில் உள்ள பிரபல புத்தகக் கடைகளில் ஒன்றான ‘Times’ புத்தகக் கடையின் அறிவிப்பால் வாசகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

லாரி மோதியதில் காயமடைந்த நபர் மருத்துவமனையில் அனுமதி!

டைம்ஸ் நிறுவனம் புத்தகக் கடைகளை (Times Bookshops) கடந்த 1978- ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நிறுவியது. அதேபோல், கடந்த 40 ஆண்டுகளாக சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் ஆங்கில மொழி புத்தகங்களை விற்பனை செய்து வருகிறது. புத்தகக் கடை ஃப்ரேசர் (Fraser) மற்றும் நீவ் லிமிடெட் (Neave Limited) நிறுவனத்திற்கு சொந்தமானது.

‘Times’ புத்தகக் கடை நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சிங்கப்பூரில் ஹாலண்ட் சாலையில் (Holland Road) உள்ள குளிர்பதனக் கிடங்கு ஜெலிட்டாவில் உள்ள கடையைத் தவிர, சிங்கப்பூரில் பிளாசா சிங்கபுரா (Plaza Singapura) மற்றும் வாட்டர்வே பாயிண்டில் (Waterway Point) செயல்பட்டு வரும் தங்களது நிறுவனத்தின் சில்லறை விற்பனையில் செய்யப்படும் புத்தகக் கிளைகளை மூடியுள்ளது.

வெளிநாட்டுப் பயணிகளுக்கு தனி.. சிங்கப்பூரர்கள், PR-களுக்கு தனி.. சாங்கி ஏர்போர்ட் பயணிகள் அப்டேட்

கிளைகளின் உரிமையாளர்களான கேபிட்டாலேண்ட் (CapitaLand) மற்றும் ஃப்ரேசர்ஸ் பிராப்பர்ட்டி (Frasers Property) புத்தகக் கடை மூடப்படுவதை உறுதிச் செய்துள்ளனர். பிளாசா சிங்கபுரா கிளை கேபிட்டாலேண்டிற்கு சொந்தமானது, அதே சமயம் வாட்டர்வே பாயிண்ட் கிளையின் உரிமையாளர் ஃப்ரேசர்ஸுக்கு சொந்தமானது.

விற்பனை குறைவு, வாடகை உயர்வு, அதிக சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் அச்சிடுதல் செலவுகள் உள்ளிட்ட காரணங்களால் தனது புத்தக விற்பனை கிளைகளை ‘Times’ மூடியுள்ளது. அதேபோல், புத்தகங்களின் விலைத் தொடர்ந்து அதிகரித்து வருவதும் காரணமாகக் கூறப்படுகிறது.

சிங்கப்பூரில் ‘மகா கவிதை’ நூல் அறிமுக விழாவில் பங்கேற்கிறார் கவிஞர் வைரமுத்து!

இதனிடையே, ‘பிளாசா சிங்கப்புரா’ (Plaza Singapura) ‘Times’ கிளையை ‘தி டிராவல் ஸ்டோர்’ வரும் மார்ச் மாத இறுதிக்குள் புதிய குத்தகைத்தாரராக இருக்கும் எனவும், அந்த கிளை மூடப்படுமா? இல்லையா” என்பது குறித்து பின்னர் தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.