சிங்கப்பூர் டோட்டோ (Toto) டிரா: முதல் பரிசுத் தொகை S$10 மில்லியன் – வெற்றி பெற கடும் போட்டி

Toto top prize S$10 million
Google Maps & Singapore Pools

சிங்கப்பூரில் டோட்டோ (Toto) டிரா குலுக்கல் பரிசுத் தொகை S$10 மில்லியன் என்ற இமாலய உச்சத்தை தொட்டுள்ளது.

கடந்த மூன்று தொடர்ச்சியான குலுக்களிலும் முதல் பரிசுகளை யாரும் வெற்றி பெறாத காரணத்தால் பரிசுத் தொகை S$10 மில்லியன் என்ற உச்சத்தை அடைந்துள்ளது.

முதல் மூன்று குலுக்களில் முதல் பரிசு முறையே S$1.2 மில்லியன், S$2.78 மில்லியன் மற்றும் S$5.61 மில்லியனாக இருந்தது.

இறுதியாக அதன் முதல் பரிசுத் தொகை S$10 மில்லியனை தொட்டுள்ளது. இந்த குலுக்கல் நாளை வியாழன் (டிசம்பர் 21) அன்று நடக்கும் என சொல்லப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை (டிச.18) நடந்த டிராவில், குரூப் 2 பரிசுகளை நான்கு பேர் வெற்றி பெற்றுள்ளனர். இதில் வெற்றி பெற்ற ஒவ்வொரு நபரும் தலா S$148,395 ஐ பெறுவர்.

வெற்றி பெற்ற நான்கு டிக்கெட்டுகளும் சிஸ்டம் 7 முறையில் வாங்கப்பட்டது ஆகும், அதில் ஒரு டிக்கெட் ஆன்லைனில் வாங்கப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.

நாளை வியாழன் இரவு 9:30 மணிக்கு இந்த குலுக்கள் நடக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது வழக்கமாக மாலை 6:30 மணிக்கு நடக்கும்.

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் வெளிநாட்டு ஊழியர்களை குறிவைக்கும் கும்பல்