சிங்கப்பூர் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதித்த இத்தாலி!

Photo: Changi Airport

சிங்கப்பூரில் உள்ள இத்தாலி நாட்டின் தூதரகம் (Italy’s embassy in Singapore) நேற்று முன்தினம் (15/12/2021) வெளியிட்டிருந்த அறிவிப்பில், “இத்தாலி நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் கொரோனா நோய்த்தொற்று அபாயம் அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர், புரூணை ஆகிய இரண்டு நாடுகளும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு நாடுகளும் பட்டியலின் ‘E’ வகைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் சிங்கப்பூர் குடிமக்கள், சிங்கப்பூர் நிரந்தர குடியுரிமை வைத்திருப்பவர்கள் உள்ளிட்டோர் இத்தாலிக்கு சுற்றுலா செல்ல டிசம்பர் 16- ஆம் தேதி முதல் அடுத்தாண்டு ஜனவரி 31- ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், மருத்துவம், வேலை மற்றும் கல்வி, மற்ற அவசரத் தேவைக்காக மட்டும் இத்தாலிக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் புதிதாக 355 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு!

இத்தகைய காரணங்களில் ஏதாவது ஒன்றிற்காக, இத்தாலி செல்லும் பயணிகள், புறப்படுவது 72 மணி நேரத்திற்கு முன்னதாக கொரோனா ‘PCR’ பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் (அல்லது) 24 மணி நேரத்தில் எடுக்க கொரோனா ‘ART’ பரிசோதனையின் நெகட்டிவ் சான்றிதழை கையில் வைத்திருக்க வேண்டும்.

இத்தாலி சென்றப் பின் வீட்டில் பயணிகள் தங்களை சுயமாக 10 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த வீட்டின் முகவரியை இத்தாலி நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கு கொடுக்க வேண்டும். பின்னர், 10 வது நாள் முடிவில் மீண்டும் PCR (அல்லது) ART கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். பின்னர், பரிசோதனை முடிவுகளை சுகாதாரத்துறையிடம் தெரிவிக்க வேண்டும்.

‘Fort Canning Service Reservoir’- யை நேரில் பார்வையிட்ட பிரதமர் லீ சியன் லூங்!

சிங்கப்பூரில் இருந்து பயணம் செய்வோர், இத்தாலி நாட்டு வழியாக தொடர்ந்து பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனினும், விமான நிலையங்களில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை விட்டு வெளியேறக் கூடாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் ஏன் பட்டியல் E- க்கு மாற்றப்பட்டது என்பதற்கான காரணம் தூதரகத்தின் அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை.

“இலங்கை- சிங்கப்பூர் இடையே VTL, Non- VTL விமான சேவை”- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவிப்பு!

கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகளை இத்தாலி நாட்டிற்கு சென்று கொண்டாடத் திட்டமிட்டிருந்த சிங்கப்பூர் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.