சிங்கப்பூரில் TraceTogether தரவுகளை காவல்துறையால் பெற முடியும்..

TraceTogether data criminal investigations
(PHOTO: Desmond Tan/ Facebook)

குற்றவியல் விசாரணைகளுக்காக TraceTogether தரவுகளை சிங்கப்பூர் காவல் படையால் (SPF) பெற முடியும் என்று உள்துறை அமைச்சர் டெஸ்மண்ட் டான் (Desmond Tan) நாடாளுமன்றத்தில் இன்று (ஜன. 4) தெரிவித்தார்.

எந்தவொரு தரவையும் பெற குற்றவியல் நடைமுறை சட்டத்தின்கீழ் SPFக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது, மேலும் அதில் TraceTogether தரவும் அடங்கும் என்று திரு டான் கூறினார்.

சிங்கப்பூரில் கனமழை…முறிந்து விழுந்த பாரம்பரிய மரம்!

தனிநபர்களால் வழங்கப்பட்ட TraceTogether தரவுகளுக்கு அரசாங்கம் தான் பாதுகாப்பு என்றும், இந்த தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்றும் திரு டான் கூறினார்.

இது தொடர்பான, நாடாளுமன்ற உறுப்பினர் (MP) கிறிஸ்டஃபர் டி சூசாவின் (Christopher de Souza) கேள்விக்கு திரு டான் பதிலளித்தார்.

குற்ற விசாரணைகளுக்கு இந்த TraceTogether தரவு பயன்படுத்தப்படுமா என்றும், அத்தகைய தரவுகளைப் பயன்படுத்துவதற்கான சட்ட விதிகள் மற்றும் பாதுகாப்புகள் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பினர்.

சட்டத்தின் கீழ், அங்கீகாரமின்றி தரவை பொறுப்பற்ற முறையில் அல்லது தெரிந்தே வெளிப்படுத்தும் அல்லது தரவை தவறாகப் பயன்படுத்தும் அதிகாரிகளுக்கு S$5,000 வரை அபராதம் விதிக்கப்படலாம் அல்லது இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம், அல்லது இரண்டும் விதிக்கப்படலாம், என்று திரு டான் கூறினார்.

ஜன்னல் விளிம்பில் நின்று கொண்டிருந்த குழந்தையை மீட்ட வெளிநாட்டு ஊழியர் – காணொளி

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…