சிங்கப்பூரில் 2021ல் ஏற்பட்ட சாலை விபத்துகள், மரணங்கள் எவ்வளவு தெரியுமா?

traffic accidents SPF

சிங்கப்பூர் காவல் படை (SPF) அளித்துள்ள தகவலின் படி, கடந்த ஆண்டு சிங்கப்பூரில் ஏற்பட்ட சாலை விபத்துகளால் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர்.

அதே போல, கடந்த ஆண்டில் போக்குவரத்து தொடர்பான விபத்துக்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.

“எனக்கு சில வேலைகள் சாதகமாக நடக்க வேண்டும்” – அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்த ஊழியர் கணேசன் சுப்பையாவுக்கு சிறை!

கடந்த ஆண்டு மொத்தம் 107 பேர் போக்குவரத்து விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர். அதற்கு முந்தைய 2020ஆம் ஆண்டில் 83 பேர் பலியாகினர், ஒப்பிட்டு நோக்குகையில் இந்த விகிதம் 28.9 சதவீதம் அதிகரித்துள்ளது.

2020ல் மரணத்தை ஏற்படுத்திய சாலை விபத்துகளின் 80 பேர் உயிரிழந்தனர். அது 2021ல் 100ஆக உயர்ந்தது, அதாவது 25 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்த அதிகரிப்பு இருந்தபோதிலும், தொற்றுநோய்க்கு முந்தைய காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, ​​மரணத்தை ஏற்படுத்திய விபத்துக்கள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை இன்னும் குறைவாகவே உள்ளது.

இதனை 2021ஆம் ஆண்டிற்கான அதன் வருடாந்திர சாலை போக்குவரத்து நிலைமை அறிக்கையில் SPF தெரிவித்துள்ளது.

100,000 மக்கள்தொகைக்கு சாலை போக்குவரத்து இறப்பு விகிதம் 2020ல் 1.46 ஆக இருந்து, அதுவே 2021ல் 1.96 ஆக அதிகரித்துள்ளது.

இலவசம்!! இலவசம்!! காதலர் தின பரிசாக உணவு வகைகளை இலவசமாக வழங்கும் சிங்கப்பூர் உணவகம் – வெளிநாட்டு ஊழியருக்கும் இலவசம்!