சிங்கப்பூர் “எல்லைகளை திறக்க போறோம்” என அறிவித்தது தான் போதும்… டிராவல் ஏஜென்சிகளில் குவியும் டிக்கெட் புக்கிங்!

travel-to-malaysia-cny-2024
Pic: File/TODAY

Singapore VTL border reopening: எல்லைகளை மீண்டும் திறக்கப்போவதாக சொன்னது போதும், சிங்கப்பூரில் இருந்து செல்லும் விமானங்களுக்கான முன்பதிவுகள் இருமடங்காக அதிகரித்துள்ளது.

அதோடு சேர்த்து, வெளிநாட்டில் உள்ள தங்குமிடங்களுக்கான (accommodation) முன்பதிவுகளும் வெள்ளிக்கிழமை (மார்ச் 25) நிலவரப்படி இருமடங்காக அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் 2 வருட இடைவெளிக்குப் பிறகு, கோலாகலமாக தொடங்கிய “நோன்பு பெருநாள் ஒளியூட்டு விழா”

முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட அனைத்து பயணிகளுக்கும் எல்லைகளை மீண்டும் திறக்கப்போவதாக சிங்கப்பூர் அறிவித்து ஒரு நாள் ஆகிறது, அதற்குள் இந்த முன்பதிவு கூட்ட நெரிசல்.

எல்லை திறப்பு தொடர்பான அறிவிப்புகள்:

VTL விமானங்கள் தேவையில்லை… அனைத்து பயணிகளும் ஏப்ரல் 1 முதல் தனிமையின்றி சிங்கப்பூர் வரலாம்!

தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகளுக்கு எல்லைகளை திறக்கும் “சிங்கப்பூர்-மலேசியா” – கோவிட்-19 சோதனைகள் இல்லை!

பயணம் தொடர்பான ஆன்லைன் தளமான Traveloka வழங்கிய தரவுகளின்படி, எல்லைகளை மீண்டும் திறக்கப்போவதாக வெளியான அறிவிப்பைத் தொடர்ந்து விமானம் மற்றும் ஹோட்டல்களுக்கான தேவை அதிகரித்திருப்பதாக கூறியுள்ளது.

அதன் ஆன்லைன் தளத்தில் சராசரி தேடல் 152 சதவீதம் மற்றும் சராசரி முன்பதிவு 227 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறியுள்ளது.

சிங்கப்பூரில் முகக்கவசம் அணிவது எங்கு கட்டாயம்? எங்கு கட்டாயம்மில்லை? – வாங்க பார்க்கலாம்!