திருச்சி விமான நிலையத்தில் ரூபாய் 89.51 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!

திருச்சி விமான நிலையத்தில் ரூபாய் 89.51 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!
Photo: Trichy Customs

 

திருச்சி விமான நிலையத்தில் பயணிகளிடம் இருந்து 1 கிலோ 414 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தங்கத்தைக் கடத்தி வைத்த மூன்று பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

உலகிலேயே ஆக சுறுசுறுப்பான அனைத்துலக விமான நிலையங்களில் சாங்கி விமான நிலையத்திற்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் வெளிநாட்டு பயணிகள் தங்கத்தைக் கடத்தி வருவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதைத் தொடர்ந்து, திருச்சி மண்டல வான் நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள், விமான நிலையாயத்தில் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், கடந்த டிசம்பர் 21- ஆம் தேதி மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து பயணிகளுடன் திருச்சி விமான நிலையம் வந்த மலிண்டோ ஏர்லைன்ஸ் (Batik Airlines) விமானத்தில் (விமான எண் பயணித்தவர்கள் மற்றும் அவர்களது உடைமைகளை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது, சந்தேகத்துடமான வகையில் இருந்த இரண்டு ஆண் பயணிகள் மற்றும் ஒரு பெண் பயணியை தனியே அழைத்துச் சென்று அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் உள்ளாடைகளில் வைத்து தங்க பேஸ்ட்டைக் கடத்தி வந்தது தெரிய வந்தது.

துவாஸ் அருகே ஏற்பட்ட விபத்தில் இரு வெளிநாட்டு ஊழியர்கள் மரணம்

இதையடுத்து, அந்த தங்கத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த மூன்று பயணிகளையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுமார் 1,414 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் மதிப்பு சுமார் ரூபாய் 89.51 லட்சம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விசாரணையில் அந்த பயணிகள் மூவரும் மகன், மருமகள், மாமனார் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.