உள்ளாடையில் வைத்து தங்கம் கடத்தல்…விமான நிலையத்தில் சிக்கிய பயணி!

உள்ளாடையில் வைத்து தங்கம் கடத்தல்...விமான நிலையத்தில் சிக்கிய பயணி!
Photo: Trichy Customs

 

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளுக்கு விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ ஏர்லைன்ஸ், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், ஸ்கூட், ஏர் ஏசியா உள்ளிட்ட விமான நிறுவனங்கள் விமான சேவையை வழங்கி வருகின்றன.

கரப்பான் பூச்சி, பாக்டீரியாக்கள் கண்டுபிடிப்பு… சிங்கப்பூர் Rasel Catering நிறுவனத்திற்கு S$4,800 அபராதம்

குறிப்பாக, திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, துபாய், ஷார்ஜா, சவூதி அரேபியா, கத்தார் உள்ளிட்ட நாடுகளுக்கு அதிகளவில் விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தங்கத்தைக் கடத்தி வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் திருச்சி மண்டல சுங்கத்துறை அதிகாரிகள், வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவ்வப்போது, வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

அந்த வகையில், ஜூலை 19- ஆம் தேதி அன்று துபாயில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வந்த பயணிகளையும், உடைமைகளையும் வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் தீவிர சோதனை செய்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த நபரைப் பிடித்த அதிகாரிகள், அவர் அணிந்திருந்த ஆடைகளை தீவிர சோதனை செய்தனர்.

அதில், அவர் வேஷ்டி மற்றும் உள்ளாடைகளில் செவ்வக வடிவிலான தங்கக் கட்டியை மறைத்துக் கடத்தி வந்ததை அதிகாரிகள் கண்டுப்பிடித்தனர். இதையடுத்து, தங்கக் கட்டியைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த பயணியைப் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

“ஒரே ஒரு APP தான் Download செய்தேன்.. மொத்த பணமும் Close” – சிங்கப்பூரில் இருப்பவர்கள் உஷார்

பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மொத்த எடை 191 கிராம் என்றும், அதன் மதிப்பு 11.56 லட்சம் ரூபாய் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.