திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்திய நபர்களுக்கு உதவி – ஆய்வாளர் பணியிடை நீக்கம்

Trichy Airport

திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்திய நபர்களுக்கு உதவி செய்த ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்ய ஆணையர் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா சூழலில் கட்டுப்பாடுகள் தொடர்ந்து நடப்பில் உள்ளன, இதில் எல்லை கட்டுப்பாடுகள் கடுமையாக பின்பற்றப்படுகின்றன.

மதுரை, கோவையில் இருந்து “உடான்” திட்டத்தில் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்களை இயக்க திட்டம்

இந்நிலையில், வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர இந்திய அரசு சார்பாக சிறப்பு விமானங்கள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகின்றன.

இதில் திருச்சி விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் தங்கத்தை கடத்தி வரும் சம்பவம் அடிக்கடி நடைபெறும் என்பது நாம் அறிந்தது தான்.

குறிப்பாக துபாய், ஷார்ஜா, சிங்கப்பூர், மலேசியா ஆகிய பகுதிகளில் இருந்து வரும் விமானங்களில் தான் அதிக அளவில் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அது ஒருபுறம் இருக்க, கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருச்சி விமான நிலையத்தில் இந்திய மதிப்பில் 1.13 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த கடத்தல் சம்பவத்தில் சுங்கத்துறையினரும் உதவியதாக புகார் எழுந்தது.

இதனை அடுத்து, அந்நேரம் பணியில் இருந்த ஆய்வாளர் அசோக் என்பவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

சாலையில் நிர்வாணமாக நடந்து சென்ற ஆடவர் கைது (காணொளி)