‘திருச்சி, சிங்கப்பூர் இடையேயான ஸ்கூட் விமான சேவை’- பயண கட்டணம் எவ்வளவு தெரியுமா?

பயணப்பைகளை எடுத்துவர முடியாமல் தவித்த ஸ்கூட் பயணிகள்: இந்தியாவில் தரையிறங்கியது - கடும் வெப்பம் தான் காரணம்
Photo: FlyScoot

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்துக்கு சொந்தமான ஸ்கூட் நிறுவனம் (Flyscoot), தமிழகத்தின் திருச்சி, கோவை ஆகிய நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு இரு மார்க்கத்திலும் நேரடி விமானச் சேவைகளை வழங்கி வருகிறது.

சிங்கப்பூரில் இருந்து இந்தியா வரும் பயணிகளின் கவனத்திற்கு… முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இந்திய சுகாதாரத்துறை அமைச்சர்!

குறிப்பாக, திருச்சி, சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும் தொடர்ந்து நேரடி விமான சேவைகளை வழங்கி வருகிறது. புத்தாண்டு, பொங்கல் ஆகிய பண்டிகை நாட்கள் அடுத்தடுத்து வரவிருப்பதால், இந்த வழித்தட விமான சேவைக்கான கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி உள்ளது விமான நிறுவனம்.

ஸ்கூட் விமான ஊழியர்களுக்கு தேசிய விருதுகள் அறிவிப்பு!

திருச்சியில் இருந்து சிங்கப்பூர் செல்வதற்கு அதிகபட்சமாக 38,325 ரூபாயும், சிங்கப்பூரில் இருந்து திருச்சி வருவதற்கு அதிகபட்சமாக 17,908 ரூபாயும் பயணக் கட்டணத்தை நிர்ணயித்துள்ளது. இது பயணிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் பயணிகள் தங்களது பயணத்தை ஒத்திவைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

Photo: Flyscoot official Website