ஸ்கூட் விமான ஊழியர்களுக்கு தேசிய விருதுகள் அறிவிப்பு!

Photo: Prime Minister Office Singapore

கடந்த 2020- ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சீனாவின் வூஹான் மாகாணத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் உச்சத்தில் இருந்த நிலையில், 100-க்கும் மேற்பட்ட சிங்கப்பூரர்களும், அவர்களது குடும்பத்தினரும் சொந்த நாட்டுக்கு திரும்ப முடியாமல் தவித்துக் கொண்டிருந்தனர்.

சிங்கப்பூரில் இருந்து இந்தியா வரும் பயணிகளின் கவனத்திற்கு… முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இந்திய சுகாதாரத்துறை அமைச்சர்!

இந்த நிலையில், 2020- ஆண்டு ஜனவரி 30- ஆம் தேதி அன்று வூஹான் மாகாணத்துக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்துக்கு சொந்தமான ஸ்கூட் நிறுவனத்தின் விமானம் அனுப்பி வைக்கப்பட்டது. அந்த விமானம் மூலம் சுமார் 92 சிங்கப்பூரர்கள் பாதுகாப்பாக சிங்கப்பூருக்கு திரும்பினர்.

அதைத் தொடர்ந்து, அதே ஆண்டு பிப்ரவரி மாதம் 9- ஆம் தேதி அன்று மீண்டும் ஸ்கூட் விமானம் வூஹான் மாகாணத்துக்கு சென்றது. இதில், மற்ற சிங்கப்பூரர்களும் அந்த விமானத்தில் ஏறி நாடு திரும்பினர்.

கார் ஓட்டக் கற்றுக்கொடுக்கும் சாக்கில் பெண்ணிடம் சில்மிஷம்! – 61 வயதான பயிற்சியாளருக்குச் சிறை!

இந்நிலையில், சிங்கப்பூரில் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் பங்காற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், தொண்டு நிறுவனங்கள், தனிநபர்களை கௌரவிக்கும் வகையில் சுமார் 9,500 பேருக்கு சிங்கப்பூர் அரசின் தேசிய விருதுகள் (National Awards) அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஸ்கூட் நிறுவன விமானத்தில் பணிபுரிந்து வரும் சுமார் 30 ஊழியர்களுக்கு தேசிய விருதுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய விருதுகளைப் பெரும் அனைவருக்கும் சிங்கப்பூர் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

சீனாவில் இருந்து சிங்கப்பூர் வழியாக தமிழகம் வந்த ஒருவருக்கு கொரோனா உறுதி!

அடுத்தாண்டு அவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும். சிங்கப்பூர் அரசின் உயரிய விருதாக இந்த விருது பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.