திருச்சி, சிங்கப்பூர் இடையேயான ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ விமான சேவை குறித்த விரிவான தகவல்!

Photo: Air India Express Official Twitter Page

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் (Air India Express), திருச்சி மற்றும் சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும் தொடர்ந்து நேரடி விமான சேவைகளை வழங்கி வருகிறது. திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு IX 682 என்ற விமானத்தையும், சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு IX 681 என்ற விமானத்தையும் தொடர்ந்து இயக்கி வருகிறது. இந்த விமான சேவையானது தினசரி மற்றும் நேரடி விமான சேவை ஆகும்.

உச்சத்தை எட்டும் கார்பன் உமிழ்வு! – சிங்கப்பூரில் கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்த இதுதான் வழியா?

கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட அடுத்தடுத்த விழா காலங்கள் வரவுள்ள நிலையில், இந்த வழித்தட விமான சேவைக்கான விமான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நவம்பர் முதல் அடுத்தாண்டு மார்ச் வரையிலான விமான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், குறைவான இருக்கைகளே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக அமைச்சருடன் சிங்கப்பூருக்கான இந்திய தூதர் சந்திப்பு!

விமான பயண டிக்கெட் முன்பதிவு மற்றும் விமான பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.airindiaexpress.in/en என்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.