திருச்சி, சிங்கப்பூர் இடையே தினசரி விமான சேவையை வழங்கி வரும் விமான நிறுவனங்களின் பட்டியல்!

Photo: Air India Express Official Twitter Page

திருச்சி மற்றும் சிங்கப்பூர் இடையே தினசரி மற்றும் நேரடி விமான சேவையை இரு மார்க்கத்திலும் ஏர் இந்தியா, ஸ்கூட், இண்டிகோ ஏர்லைன்ஸ் ஆகிய மூன்று விமான நிறுவனங்கள் தொடர்ந்து வழங்கி வருகின்றன. இவற்றை ஒவ்வொன்றாக விரிவாகப் பார்ப்போம்.

ட்விட்டரில் மீண்டும் இணைந்த டொனால்ட் டிரம்ப் – CEO எலோன் மஸ்க் அனுமதி

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் (Air India Express), திருச்சி, சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும் தொடர்ந்து விமான சேவையை வழங்கி வருகிறது. இவை அனைத்தும் நேரடி விமான சேவை ஆகும்.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்துக்கு சொந்தமான ஸ்கூட் விமான நிறுவனம் (Scoot Airlines), திருச்சி மற்றும் சிங்கப்பூர் இடையே தினசரி மற்றும் நேரடி விமான சேவைகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறது.

‘டக் டக்’ ஆப்பிரிக்கப் பென்குயின்களின் சிங்கார அணிவகுப்பைக் காணலாமா! – சிங்கப்பூர் உயிரியல் பூங்காவில் கண்காட்சிக்கு ஆன்லைனில் முன்பதிவு!

அதேபோல், இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் (Indigo Airlines), திருச்சி மற்றும் சிங்கப்பூர் வழித்தடத்தில் தினசரி ஒரு நேரடி விமான சேவைகளையும், சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்கள் வழியாக ஐந்து மேற்பட்ட விமான சேவைகளை வழங்கி வருகிறது.

ஏர் ஏசியா, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், மலிண்டோ ஏர்லைன்ஸ் உள்ளிட்ட விமான நிறுவனங்களும் திருச்சியில் சிங்கப்பூருக்கு விமான சேவைகளை வழங்கி வருகின்றன. எனினும் இவை அனைத்தும் நேரடி விமான சேவை கிடையாது.