‘திருச்சி, சிங்கப்பூர் இடையேயான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை’- பிப்ரவரி மாதத்திற்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

Photo: Air India Express

திருச்சி மற்றும் சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும் தொடர்ந்து விமானங்களை இயக்கி வருகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் (Air India Express). திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு IX 682 என்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானமும், சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு IX 681 என்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானமும் இயக்கப்பட்டு வருகிறது.

அபுதாபி விமான நிலையத்தில் ட்ரோன் மூலம் வெடிகுண்டு தாக்குதல்… கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ள சிங்கப்பூர்!

இந்த நிலையில், திருச்சி, சிங்கப்பூர் இடையேயான வரும் பிப்ரவரி மாதத்திற்கான விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிப்ரவரி மாதத்தில் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளைத் தவிர வாரத்தில் மற்ற நாட்களில் திருச்சி மற்றும் சிங்கப்பூர் இடையே விமானங்கள் இயக்கப்படுகிறது. அதேபோல், சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு பிப்ரவரி மாதத்தில் ஞாயிற்றுக்கிழமை, திங்கள்கிழமை தவிர வாரத்தில் மற்ற நாட்களில் விமானங்கள் இயக்கப்படவுள்ளது. திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு செல்வதற்கு விமான சேவை குறைந்தபட்ச கட்டணமாக ரூபாய் 7,266.20 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விமான சேவை அட்டவணை, டிக்கெட் முன்பதிவு தொடர்பான மேலும் விவரங்களுக்கு https://www.airindiaexpress.in/en என்ற இணையதள பக்கத்தை தொடர்புக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு செல்லும் பயணிகள், சிங்கப்பூர் அரசின் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் விரிவான வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

2.2 மில்லியன் இலவச முகக்கவசங்களை விநியோகம் செய்த டெமாசெக் அறக்கட்டளை!

சிங்கப்பூர் அரசின் கொரோனா தடுப்பூசியை முழுமையாகச் செலுத்திக் கொண்டவர்களுக்கான சிறப்புப் பயணத் திட்டத்தின் (Vaccinated Travel Lanes- ‘VTL’) கீழ் சிங்கப்பூருக்கு செல்லும் இந்திய பயணிகள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள தேவையில்லை. எனினும், சிங்கப்பூர் சுகாதாரத்துறையின் அறிவுறுத்தல்களைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.