துவாஸ் அவென்யூ 20- ல் திடீர் தீ விபத்து- ஒருவர் உயிரிழப்பு!

Photo: SCDF Official Faecbook Page

 

சிங்கப்பூரில் உள்ள துவாஸ் அவென்யூ 20- ல் (Fire @ No. 20 Tuas Ave 20) நேற்று (23/09/2021) பிற்பகல் 03.15 PM மணிக்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து குறித்து சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படையினருக்கு (Singapore Civil Defence Force- ‘SCDF’) தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படையின் தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

சிங்கப்பூரில் 700 ஊழியர்களை பணி நீக்கம் செய்த பானாசோனிக் (Panasonic) நிறுவனம்

பின்னர், அவென்யூவின் முதல் தளத்தில் உள்ள ஒரு மின் சுவிட்ச்ரூமில் (Electrical Switchroom) புகை சூழ்ந்திருப்பதைக் கவனித்தனர். இதையடுத்து, தீயணைப்பு வீரர்கள் சுவாசக் கருவி செட்டை (Breathing Apparatus Sets) அணிந்துக் கொண்டு தீ விபத்து ஏற்பட்ட அந்த இடத்திற்கு மிக கவனமாக நுழைந்தனர். அதைத் தொடர்ந்து, தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை முழுவதுமாக அணைத்தனர்.

தீ காயங்களுடன் 59 வயது மற்றும் 64 வயதுடைய இருவரை மீட்ட வீரர்கள், ஆம்புலன்ஸ் மூலம் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் தீக்காயங்களுக்கான சிகிச்சைப் பிரிவில் (Singapore General Hospital) அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த விபத்தில், 65 வயது முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அவென்யூவில் இருந்து 80 பேர் சுயமாக வெளியேறினர்.

கிருமி பரவல் குழுமத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதி

இந்த விபத்து குறித்து சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இந்த தகவலை சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படை தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.