துவாஸ் வெடிப்புச் சம்பவம் – 2004ஆம் ஆண்டுக்கு பிறகு விசாரணை குழு…

Tuas explosion
(Photo: MWC/Facebook)

துவாஸில் உள்ள Stars Engrg தளத்தில் ஏற்பட்ட பயங்கர தீ மற்றும் வெடிப்பு குறித்து ஆராய விசாரணைக் குழுவை நியமிக்கப்பட உள்ளதாக மனிதவள அமைச்சகம் (MOM) சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தால் 3 ஊழியர்கள் உயிரிழந்தனர், மேலும் 5 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

செம்பவாங் விபத்தில் வடிகாலில் சொருகிய கார்.. ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதி

மேலும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட இரண்டு ஊழியர்கள் குணமடைந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதார (WSH) சட்டத்தின்கீழ், நியமிக்கப்படும் விசாரணைக் குழு தீ மற்றும் வெடிப்புக்கு காரணமான காரணிகள் குறித்து முழுமையான ஆய்வை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது போன்ற சம்பவங்கள் மீண்டும் ஏற்படாமல் தடுப்பதற்கான ஒழுங்குமுறை அல்லது நடவடிக்கைகள் உள்ளிட்ட பரிந்துரைகளையும் அது செய்யும் என்று MOM செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

32E துவாஸ் அவென்யூ 11இல் ஏற்பட்ட விபத்து எளிதில் தீப்பற்றக்கூடிய தூசி வெடிப்பால் ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடைசியாக விசாரணை குழு, Nicoll நெடுஞ்சாலை விபத்து தொடர்புடைய MRT பணிநிலைய சம்பவம் குறித்து விசாரிக்க 2004ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டது.

பொங்கோலில் இருவரைத் தாக்கி பிடிபட்ட காட்டுப்பன்றி