நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி, சிரியாவுக்கு உதவிக்கரம் நீட்டும் சிங்கப்பூர்!

Photo: Singapore Red Cross

துருக்கி மற்றும் சிரியாவில் பிப்ரவரி 6- ஆம் தேதி அன்று அதிகாலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் கட்டிடங்கள், வீடுகள், வணிக வளாகங்கள் என பெரும்பாலான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியுள்ளது. பின்னர், அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அரசுமுறைப் பயணமாக சிங்கப்பூருக்கு வருகிறார் வியட்நாம் பிரதமர்!

இதையடுத்து, துருக்கி மற்றும் சிரியாவில் பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவினர் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அதிகாலை நேரத்தில் மக்கள் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால், கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,000-யைத் தாண்டியுள்ளது.

சுமார் 13,000- க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். நிவாரணப் பணிகள் தொடர்ந்து வரும் நிலையில், கட்டிட இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றனர். மக்கள் தங்களது உறவினர்களை கண்ணீருடன் தேடி அலையும் காட்சி காண்போரை கண்கலங்க வைக்கிறது.

வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்க சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு தடை – MOM அதிரடி

மீட்புப் பணிகளில் அமெரிக்கா, இந்தியா, ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் மீட்புப் படையினரும் நிலநடுக்கத்தால், பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் முகாமிட்டுள்ளனர். அத்துடன், நிவாரணப் பொருட்கள், உணவுகள், ஆடைகள் என அனைத்தும் துருக்கி மற்றும் சிரியாவுக்கு உலக நாடுகள் விமானங்கள் மூலம் அனுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில், துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு சிங்கப்பூர் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து, சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் (Singapore Red Cross- ‘SRC’)வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி மற்றும் சிரியா ஆகிய இரண்டு நாடுகளுக்கு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு உதவ தலா 50,000 அமெரிக்க டாலர்கள் வழங்கப்படும் என்று உறுதியளிக்கிறது. இந்த தொகை துருக்கி செஞ்சிலுவைச் சங்கத்திற்கும் (Turkish Red Crescent), சிரியா அரபு செஞ்சிலுவைச் சங்கத்திற்கும் (Syrian Arab Red Crescent) வழங்கப்பட்டு, அவர்கள் மூலம் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளது.

துருக்கி, சிரியாவில் கடும் நிலநடுக்கம்: ஆயிரக்கணக்கானோர் மரணம் – சிங்கப்பூர் ஆழ்ந்த இரங்கல்

அதேபோல், சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (Singapore Civil Defence Force) தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், துருக்கி நாட்டிற்கு ‘Operation Lionheart’ என்ற சிறப்புப் படையை அனுப்ப இருப்பதாக தெரிவித்துள்ளது. இதில், பேரிடர் மீட்புப் படை வீரர்கள், மருத்துவர்கள ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.