“முட்டாள் ஒருவரைக் கண்டுபிடித்த பிறகு ட்விட்டர் சிஇஓ பதவியில் இருந்து விலகுவேன்”- எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு!

Twitter

டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுமான எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தில் பல்வேறு மாற்றங்களைச் செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக, ட்விட்டர் பக்கத்தில் வெரிஃபைடு (Verified) எனப்படும் ப்ளூ டிக்கிலும் மாற்றங்களைச் செய்துள்ளார். அதன்படி, நிறுவனங்களுக்கு கோல்டு நிறத்திலும், அரசாங்கம் தொடர்புடைய கணக்கிற்கு கிரே நிறத்திலும் தற்போது டிக் வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே உள்ள ப்ளூ டிக் தனிநபர், அமைச்சர்கள், நடிகர்கள், நடிகைகள், பத்திரிகையாளர்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

சென்னை விமான நிலையத்தில் உகாண்டாவைச் சேர்ந்த பெண் கைது!

எனினும், வெரிஃபைடு கணக்கிற்கான மாதாந்திரக் கட்டணத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதேபோல், ட்விட்டர் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்ததால், ஊழியர்கள் தாமாகவே முன்வந்து பதவி விலகி வருகின்றனர்.முன்னதாக, ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த பராக் அகர்வால் உள்ளிட்டோரை எலான் மஸ்க் அதிரடியாக நீக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், எலான் மஸ்க் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், நான் ட்விட்டர் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டுமா? என ட்வீட் செய்து வாக்கெடுப்பு ஒன்றை நடத்தினார். அத்துடன், பெரும்பான்மையானவர்களின் கருத்தை ஏற்றுக் கொண்டு அதற்குத் தான் கட்டுப்படுவதாகவும் அவர் உறுதியளித்திருந்தார்.

உங்களுடைய சமூக மேம்பாட்டு மன்றப் பற்றுச்சீட்டுகளை நன்கொடையாக வழங்கலாம்!

இந்நிலையில், 57.5% ட்விட்டர் பயனர்கள் எலான் மஸ்க் பதவி விலக வேண்டும் (ஆம்) என்றும், 42.5% ட்விட்டர் பயனர்கள் எலான் மஸ்க் பதவி விலக வேண்டாம் (இல்லை) என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து எலான் மஸ்க், தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “இந்த வேலைக்கு முட்டாள்தனம் மிகுந்த ஒருவரை நான் கண்டுபிடித்த உடன் நான் ட்விட்டர் சிஇஓ பதவியில் இருந்து விலகுவேன். அதன் பிறகு, நான் சாஃப்ட்வேர் மற்றும் சர்வர் டீம்களை மட்டும் கவனித்துக் கொள்வேன்” என்று பதிவிட்டுள்ளார்.