ட்விட்டரில் புதிய அம்சம் அறிமுகம்!

File Photo

டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து பல்வேறு மாற்றங்களைச் செய்து வருகிறது. அதில், ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வ கணக்கு எனப்படும் வெரிஃபைடு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மாதந்தோறும் கட்டணம் செலுத்தும் முறையை அறிவித்திருந்தார். அத்துடன், கட்டணம் செலுத்தி வெரிஃபைடு வாங்கும் முறையையும் அறிமுகப்படுத்தியிருந்தார். இதற்கு ட்விட்டர் பயனர்கள் பலரும் தங்களது அதிருப்தி ட்விட்டர் பக்கத்திலே வெளிப்படுத்தியிருந்தனர்.

சிங்கப்பூரில் களைக்கட்டியுள்ள கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!

அதேபோல், வெரிஃபைடு (Verified) என்ற அதிகாரப்பூர்வ கணக்கிற்கு ப்ளூ டிக் மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில், தனிநபர் மற்றும் பிரபலங்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வழக்கம் போல் ப்ளூ டிக் வழங்கப்பட்டு வருகிறது. தனியார் நிறுவனங்களுக்கு கோல்டு கலர் வெரிஃபைடு டிக்கும், அரசு மற்றும் அரசு சார்ந்துள்ள அமைச்சகங்கள், அலுவலகங்கள் பெயரிலான ட்விட்டர் வெரிஃபைடு கணக்குகளுக்கு கிரே நிற டிக் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், யூ-டியூப் பக்கங்களில் பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்களை எத்தனை பேர் பார்த்துள்ளனர் என்ற வசதி அதில் உள்ளது. யூ-டியூப்- பைத் தொடர்ந்து ட்விட்டர் பக்கத்திலும் ட்விட்டர் பயனர் பதிவிடும் பதிவுகளை எத்தனை பேர் பார்த்துள்ளனர் என்பதை அறிந்துக் கொள்ளும் வசதியை அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

“14 வயது சிறுமி, 84 வயது முதியவர் ஆகியோரை காணவில்லை”- தகவல் கொடுக்குமாறு சிங்கப்பூர் காவல்துறை வேண்டுகோள்!

அந்த அம்சம் ட்விட்டரில் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் மூலம் ட்விட்டர் பயனர் தான் பதிவிடும் கருத்துகளை எத்தனை பேர் (அல்லது) எத்தனை முறைப் பார்த்திருக்கிறார்கள் என்பதை அறிந்துக் கொள்ள முடியும். அத்துடன், தான் பதிவிடும் கருத்துகளின் தன்மையை அவரால் அறிந்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் பக்கத்தில் இடம் பெற்றுள்ள ‘View’ அம்சத்துக்கு ட்விட்டர் பயனர்கள் பலரும் வரவேற்புத் தெரிவித்துள்ளனர்.