ட்விட்டரில் வெரிஃபைடு கணக்கு வைத்திருப்பவர்களின் கவனத்திற்கு…அதிரடி அறிவிப்பை வெளியிட்டது ட்விட்டர் நிறுவனம்!

File Photo

டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க், கடந்த 2022- ஆம் ஆண்டு இறுதியில் பிரபல சமூக வலைதளமான ட்விட்டர் நிறுவனத்தை இந்திய மதிப்பில் சுமார் 3.65 லட்சம் கோடி ரூபாய்க்கு, அதாவது 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு விலைக்கு வாங்கினார்.

பிரபல ஐ.டி. நிறுவனம் அறிவித்துள்ள ஆட்குறைப்பு நடவடிக்கை… ஊழியர்கள் கடும் அதிர்ச்சி!

அதைத் தொடர்ந்து, ட்விட்டர் நிறுவனத்தில் செலவுகளைக் குறைக்கவும், லாபங்களை அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்ட எலான் மஸ்க், தனது நிறுவனத்தில் உயர் பொறுப்பில் இருந்தவர்களை கூண்டோடு பணிநீக்கம் செய்தார். அத்துடன், ட்விட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 50% ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ததோடு மட்டுமின்றி, ஊழியர்களுக்கான புதிய விதிமுறைகளையும் அறிவித்திருந்தார். இதனை ஏற்றுக் கொண்டவர்கள் பணியில் இருக்கலாம். மற்ற ஊழியர்கள் பணியில் இருந்து விலகிக் கொள்ளலாம் என்று இதுப்போன்ற அதிரடி உத்தரவுகளை ஊழியர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பியிருந்தார்.

இதன் காரணமாக, ட்விட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஊழியர்கள் பெரும்பாலானோர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

தொடர் விடுமுறை காரணமாக, உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்!

இந்த நிலையில், ட்விட்டரில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த வெரிஃபைடு (Twitter Verified Account) எனப்படும் ப்ளூ டிக்கிற்கு கட்டணத்தையும் நிர்ணயித்து நடைமுறைப்படுத்தியுள்ளார். மேலும், தனிநபர் கணக்குகளுக்கு ப்ளூ டிக்கும், தனியார் நிறுவனங்களின் ட்விட்டர் வெரிஃபைடு கணக்குகளுக்கு கோல்டு நிற டிக்கும், அரசு மற்றும் அரசுத்துறைகளின் கணக்குகளுக்கு பழுப்பு நிற டிக்கும் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு ஏற்றவாறு கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டு இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ட்விட்டரில் ஏற்கனவே கணக்கு வைத்திருந்து, அதனை வெரிஃபைடு செய்து பயன்படுத்திவருபவர்களுக்கான முக்கிய அறிவிப்பை ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ட்விட்டரில் பழைய முறையில் வெரிஃபைடு பெற்று, அந்த கணக்கைப் பயன்படுத்தி வரும் பயனர்களின் ப்ளூ டிக் வெரிஃபைடு நீக்கப்படும். இந்த புதிய நடைமுறை வரும் ஏப்ரல் 1- ஆம் தேதி முதல் அமலுக்கு வரும். எனவே, ப்ளூ டிக் தொடர வேண்டும் என்று எண்ணும் பயனர்கள் உடனடியாக, கட்டணத்தைச் செலுத்தி தக்க வைத்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.