வெளிநாட்டு ஊழியருக்கு மரணம் ஏற்படுத்திய நிறுவனம், மேலாளர் மீது குற்றச்சாட்டு

construction worker death
CNA reader

ஒரு நிறுவனம் மற்றும் வடிவமைப்பு மேலாளர் மீது இன்று வியாழக்கிழமை (ஜனவரி 27) வெளிநாட்டு ஊழியருக்கு மரணம் ஏற்படுத்தியதாக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

வேலையிட பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக கட்டுமான ஊழியருக்கு மரணம் ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டது.

நிர்வாண டிக்டாக் காணொளி.. வீட்டுப் பணிப்பெண் செய்த கூத்து – சிறையில் அடைத்த போலீஸ்

2016ஆம் ஆண்டு பிப்ரவரியில், மாண்டலே சாலையில் உள்ள லீ காங் சியான் ஸ்கூல் ஆஃப் மெடிசின்னில் உள்ள கட்டுமான தளத்தில் ஏற்பட்ட விபத்தில், 25 வயதான வெளிநாட்டு ஊழியர் இறந்தார்.

அவர் இயக்கிக்கொண்டிருந்த கிரேன் கவிழ்ந்து கட்டிடத்திலிருந்து விழுந்து இந்த சம்பவம் ஏற்பட்டதாக மனிதவள அமைச்சகம் பின்னர் தெரிவித்தது.

இரண்டாவது கட்டுமான ஊழியருக்கு காயம் ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

வியாழன் அன்று, கிரேன் சப்ளையர் Citigondola-விற்கு பணியிடப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரச் சட்டத்தின் (WSHA) கீழ் பாதுகாப்பை உறுதிசெய்யத் தவறியதற்காக ஒரு குற்றச்சாட்டு விதிக்கப்பட்டது.

மேலும், பாதுகாப்பை உறுதி செய்யாத வடிவமைப்பு மேலாளர் Vu Phan Anh மற்றும் கட்டுமான நிறுவனம் Citiwall மீது குற்றம் சாட்டப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட மூன்று தரப்பினரும் மார்ச் மாதம் நீதிமன்றத்திற்கு திரும்ப உள்ளனர்.

சிங்கப்பூரில் விபத்தில் சிக்கி காலை இழந்த தமிழக ஊழியர்: “நம்ம ஊழியருக்கு நாம தான் உதவனும்” – முழு ரிப்போர்ட்