சிங்கப்பூரில் தொற்று பாதித்த நபர்கள் சென்றுவந்த பொது இடங்களின் புதிய பட்டியல்..!

Two F&B outlets at Bugis Junction among places visited by COVID-19 cases
(PHOTO: Bugis Junction from Google Street View)

சிங்கப்பூரில் COVID-19 கிருமித்தொற்று பாதித்த நபர்கள் சென்றுவந்த பொது இடங்களின் பட்டியலில் புதிதாக சில இடங்களைச் சுகாதார அமைச்சகம் (MOH) சேர்த்துள்ளது.

புதிய இடங்களின் பட்டியலில், Bugis Junction மாலில் உள்ள Starbucks காப்பிக்கடை மற்றும் Xiao Long Kan Hotpot ஆகியவை இடம்பெற்றுள்ளதாக MOH தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : இரு வெளிநாட்டு பணிப்பெண்கள் உயிரிழந்த லக்கி பிளாசா கார் விபத்து – ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு..!

பொது இடங்களில் பட்டியல்:
  • பாசிர் ரிஸ் விளையாட்டு வளாகத்தில் உள்ள McDonald’s கிளை
  • அங் மோ கியோ அவென்யு 10ல் உள்ள S-11 AMK 530 உணவு நிலையம்
  • Orchard Central மாலில் உள்ள Da long Yi Hotpot உணவகம்
  • Temple ஸ்ட்ரீட்டில் உள்ள Mei Heong Yuen பழக்கடை
Source : MOH

குறிப்பிட்ட அந்த இடங்களில் இருந்தவர்கள், அங்கு சென்றுவந்த நாளிலிருந்து 14 நாட்களுக்கு அவர்களின் ஆரோக்கியத்தை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

கிருமித்தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தோருக்குத் தகவல் அளிக்கப்படும் என்றும் MOH குறிப்பிட்டுள்ளது.

குறிப்பிட்ட இடங்களைப் பொதுமக்கள் தவிர்க்கத் தேவையில்லை என்றும் MOH கூறியுள்ளது.

துப்புரவு மற்றும் கிருமி நீக்கம் குறித்த வழிகாட்டுதல்களை வழங்க தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு வழங்கும் என்று தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் இரட்டை கொலை செய்துவிட்டு வெளிநாடு தப்பிச்சென்ற பணிப்பெண்ணுக்கு 20 ஆண்டுகள் சிறை.!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
  Facebook
 Twitter
 Telegram

Sharechat

Instagram