போலி சிங்கப்பூர் பாஸ்போர்ட் வைத்திருந்த வெளிநாட்டினர் இருவருக்கு சிறை..!

Two men jailed for 8 months for holding, obtaining fake Singapore passport and identity card
Pushparaj Kapil (left) and Ramachandran Kriysso Prasshad (right). (Photo: ICA)

சிங்கப்பூரில் போலி பாஸ்போர்ட் மற்றும் போலி அடையாள அட்டை தொடர்பான குற்றங்களுக்காக இரண்டு பேருக்கு 8 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 29 அன்று துவாஸ் சோதனைச் சாவடியில், இலங்கை ஆண்கள் இருவரையும் கைது செய்ததாகக் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : ஆட்குறைப்புக்கு ஆளாகும் ஊழியர்களுக்கு அனுகூலங்களைத் தராதோர் தண்டிக்கப்படுவர் – மனிதவள அமைச்சர்..!

கனடாவுக்குள் அகதியாக, 21 வயதான புஷ்பராஜ் கபில் என்பவர் நுழைய விரும்பியுள்ளார். மேலும் அவர் “சாம்” என்று தெரிந்த ஒருவரின் உதவியையும் நாடியுள்ளார்.

கனடாவுக்கான பயண ஏற்பாடுகளுக்காக சாம்க்கு இலங்கை ரூபாய் மதிப்பில் 60 லட்சம் (S$45,000) தருவதாக கபில் ஒப்புக்கொண்டார்.

பின்னர் சாம், 32 வயதான ராமச்சந்திரன் கிரிசோ பிரஷாத் என்பவரை தொடர்பு கொண்டார், அவர் கபிலின் கனடா பயணத்தை எளிதாக அமைத்துத்தர ஒப்புக்கொண்டுள்ளார்.

அதை தொடர்ந்து பிரஷாத், ஜனவரி 26 அன்று கோலாலம்பூரில் முஹம்மது என்ற மலேசிய ஆடவரின் உதவியுடன் போலியான சிங்கப்பூர் பாஸ்போர்ட் மற்றும் போலி சிங்கப்பூர் அடையாள அட்டையைப் பெற்றார்.

Two Sri Lankan Men Sentenced To Eight Months' Imprisonment For Offences Under The Passports Act and National…

Posted by Immigration & Checkpoints Authority on Friday, June 5, 2020

பிப்ரவரி 28 ம் தேதி, பிரஷாத் கபிலுக்கு போலி ஆவணங்கள் அடங்கிய ஒரு பையை வழங்கியுள்ளார், மேலும் இருவரும் கோலாலம்பூரிலிருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்டு சென்றனர்.

இருவரும் மறுநாள் காலை 6.30 மணியளவில் துவாஸ் சோதனைச் சாவடி வந்துள்ளனர். குடிவரவு கவுண்டரில், கபில் தனது இலங்கை பாஸ்போர்ட்டை ICA அதிகாரியிடம் காட்டினார்.

ஆனால் அவரது நடத்தையில் அதிகாரிக்குச் சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்து கபிலையும், பிரஷாத்தையும் மேலதிகாரியிடம் அனுப்பிவைத்தார்.

சோதனையில் அவர்களிடம் போலி சிங்கப்பூர் பாஸ்போர்ட் மற்றும் அடையாள அட்டை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இருவரும் உடனடியாக கைது செய்யப்பட்டனர்.

போலியான சிங்கப்பூர் பாஸ்போர்ட் அல்லது போலி அடையாள அட்டையை தெரிந்தே வைத்திருந்த குற்றவாளி மற்றும் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஒருவருக்கு S$10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம், 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் வெளிநாட்டை சேர்ந்தவர் மரணம் – மொத்தம் 25ஆக உயர்வு..!