ஆட்குறைப்புக்கு ஆளாகும் ஊழியர்களுக்கு அனுகூலங்களைத் தராதோர் தண்டிக்கப்படுவர் – மனிதவள அமைச்சர்..!

Firms that 'disguise' layoffs could have JSS wage support withdrawn: Josephine Teo
Firms that 'disguise' layoffs could have JSS wage support withdrawn: Josephine Teo (PHOTO: GOV.SG)

சிங்கப்பூரில் COVID-19 தொற்றால் பொருளாதாரம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அதாவது சிங்கப்பூர் முதன் முதலில் தனி நாடாக 1965ஆம் ஆண்டில் உருவானதில் இருந்து இதுவரை பார்த்திடாத பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், ஊழியர்களை ஆட்குறைப்பு செய்து அவர்களுக்கான அனுகூலங்களை கொடுக்காமல் மெத்தன போக்கு காட்டும் முதலாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : சிங்கப்பூர் மத்திய விரைவுச்சாலை விபத்தில் வாய்க்காலில் இறந்து கிடந்த ஆடவர் – தொடரும் விசாரணை..!

இந்த ஆண்டு சிங்கப்பூர் பொருளாதாரம் 4-லிருந்து 7 சதவீதம் வரை வீழ்ச்சி சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சிங்கப்பூரில் ஏறத்தாழ 100,000 ஊழியர்கள் ஆட்குறைப்பு செய்யப்படக்கூடும் என்றும் சிங்கப்பூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

அதாவது ஒரு ஊழியருக்குப் பதிலாக இன்னொரு ஊழியரை வேலைக்கு எடுக்காமல், அந்த ஊழியரை வேலையைவிட்டு நீக்கினால் அது ஆட்குறைப்பாக கருதப்படும் என்று டியோ குறிப்பிட்டுள்ளார்.

ஊழியர்களின் அனுகூலங்கள், ஒப்பந்தத்தில் இடம்பெற்றதால் அதை நிறைவேற்றுவது ஒவ்வொரு முதலாளிகளின் கடமையாகும்.

மேலும் முதலாளிகள், ஆட்குறைப்பு செய்யப்படும் ஊழியர்களுக்கு அதற்கான அனுகூலங்களைத் தர சிரமத்தை எதிர்நோக்கக்கூடும் என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும், ஆட்குறைப்புக்கு ஆளான ஊழியர்களுக்கு முதலாளிகள் தங்களால் முடிந்த அளவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதில் முதலாளிகளுக்கு உண்மையில் நிதி நெருக்கடி இருந்தால், ஆட்குறைப்புக்கு ஆளாகும் ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய அனுகூலங்கள் தொடர்பாக கலந்துரையாடி மாற்றி அமைக்கலாம் என முத்தரப்புப் பங்காளித்துவம் இணங்கியுள்ளது.

அளவை மீறி சம்பளக் குறைப்பு செய்யப்பட்டால் முதலாளிகளை MOM அழைத்து பேச்சுவார்த்தை நடத்தும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதலாளிகள் அறிமுக செய்ய உள்ள செலவு குறைப்பு நடவடிக்கைகள் குறித்த விவரங்களைத் MOM இடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் வெளிநாட்டை சேர்ந்தவர் மரணம் – மொத்தம் 25ஆக உயர்வு..!