“போரால் பாதிக்கப்பட்ட உக்ரைன் மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் 1,00,000 அமெரிக்க டாலர்கள் வழங்கப்படும்”- சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் அறிவிப்பு!

Photo: Singapore Red Cross Official Twitter Page

உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. ரஷ்யப் படைகளுக்கு உக்ரைன் படையினர் பதிலடி கொடுத்து வருகின்றன. இதனால் இரு தரப்பிலிருந்தும் சுமார் 1000- க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் உக்ரைன் நாட்டு மக்கள் பலரும் உயிரிழந்துள்ளனர். பலர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். போர் காரணமாக, உக்ரைன் நாட்டு பொதுமக்கள் தங்களின் உயிருக்கு அஞ்சி, மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள சுரங்கப் பாதைகளில் தஞ்சமடைந்துள்ளனர். அதேபோல், உக்ரைனுக்கு அருகில் உள்ள அண்டை நாடுகளுக்கும் உக்ரைன் மக்கள் தஞ்சமடைந்து வருகின்றனர்.

தொலைந்து போன ரோலக்ஸ் கடிகாரம்… எடுத்தவர்கள் திருப்பி தர கோரிக்கை வைத்த நபர்

உக்ரைன் நாட்டில் படித்து வரும் வெளிநாட்டு மாணவர்களை அந்தந்த நாடுகளின் அரசுகள் தூதரகங்கள் மூலம் மாணவர்களை பாதுகாப்பாக மீட்டு வருகின்றன. இந்த நிலையில், உக்ரைன் நாட்டு குடிமக்களில் 18 வயது முதல் 60 வயதுக்குட்பட்ட ஆண்கள் நாட்டை விட்டு வெளியேற அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், அவர்கள் தங்கள் குடும்பத்தினரை பாதுகாப்பான இடங்களுக்கு கண்ணீருடன் அனுப்பி வருகின்றனர்.

உக்ரைன் மீதான போரை உடனடியாக நிறுத்தும்படி, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவை வலியுறுத்தி வருகின்றன. மேலும், ரஷ்யாவுக்கு எதிராக அந்நாட்டில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உலகின் பல்வேறு நகரங்களிலும் ஒன்றுக் கூடிய மக்கள் உக்ரைன் மக்களுக்கு தாங்கள் துணை நிற்கிறோம்; ரஷ்யாவின் நடவடிக்கையைக் கண்டிக்கிறோம் என்று கோஷமிட்டு வருகின்றன.

சிங்கப்பூர் அதிபர், பிரதமர் ஆகியோரை நேரில் சந்தித்துப் பேசிய வியட்நாம் அதிபர்!

இந்த நிலையில், போரால் பாதிக்கப்பட்ட உக்ரைன் நாட்டு மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், சுமார் 1,00,000 அமெரிக்க டாலர்கள் ((US$1,00,000) வழங்கப்படும் என்று சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் (Singapore Red Cross) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. போரால் இடம் பெயர்ந்தப் பாதிக்கப்படக் கூடியவர்களுக்கு Hygiene kits, Family kits மற்றும் Household kits போன்ற நிவாரணப் பொருட்களை வழங்குவதற்கு, இந்த தொகை ஆதரவளிக்கும் எனத் தெரிவித்துள்ளது.

உக்ரைனில் சுமார் 3 மில்லியன் மக்கள் மனிதாபிமான உதவியை நம்பியுள்ளனர். 8,50,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். உதவி தேவைப்படுபவர்களில் 30% பேர் முதியவர்கள் ஆவர்.

தமிழ்நாட்டிலிருந்து சிங்கப்பூர் இருசக்கர வாகனத்தில் செல்ல முடியுமா? இவ்வளவு நாள் இது தெரியாமல் போச்சே! – tamilnadu to singapore bike travel

உக்ரைனிய செஞ்சிலுவைச் சங்கம் (Ukrainian Red Cross Society) மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (International Federation of Red Cross) மற்றும் மற்ற செஞ்சிலுவைச் சங்கங்களுடன் (Red Crescent Societies) நெருங்கிய தொடர்பில் இருப்பதாக சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் கூறியுள்ளது.