சிங்கப்பூரில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் – முறையாக செயல்படாத கட்டுமான நிறுவனத்தின் மீது PUB நடவடிக்கை

PUB

கட்டுமான நிறுவனமான Samwoh நிறுவனத்தின் அங்கீகரிக்கப்படாத வடிகால் பணிகள் காரணமாக கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி, தெம்பனீஸ் அவென்யூ 10 மற்றும் பாசிர் ரிஸ் டிரைவ் சந்திப்பில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டது.

இதனை பொது பயனீட்டு கழகம் (PUB) தெரிவித்துள்ளது, மேலும் அந்நிறுவனத்தின் மீது அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் PUB கூறியுள்ளது.

வருமானம் இன்றி தவித்த “லிட்டில் இந்தியா”…. விடுதி வெளிநாட்டு ஊழியர்கள் வருகை செய்தியால் மகிழ்ச்சி

அந்த வெள்ளத்தின் காரணத்தை அறிய PUB முழுமையான விசாரணைகளை மேற்கொண்டது.

அதாவது அந்த வெள்ளம் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நீடித்தது என்றும், மேலும் போக்குவரத்து சந்திப்பில் 200மீ பகுதியை அது பாதித்தது என்றும் இன்றைய (செப். 11) செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் கனமழை: சாலைகளில் ஏற்பட்ட தீடீர் வெள்ளம்.! (காணொளி)

புதிதாக அமைக்கப்பட்ட வடிகால் ஏற்கனவே உள்ள வடிகாலுடன் சரியாக இணைக்கப்படவில்லை என்றும் இதில் கூறப்படுகிறது.

பரிந்துரைக்கப்பட்ட வடிகால் நீர் திசை திருப்பும் பணிகளைத் தொடர, அந்நிறுவனம் PUBயின் ஒப்புதலைப் பெற தவறிவிட்டது என்றும் PUB தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் தீடீர் வெள்ளம்: நீரில் மூழ்கிய வாகனங்கள்…சிக்கிக் கொண்டவர்களை மீட்ட SCDF வீரர்கள்.!