பாலியல் ரீதியாக வலுப்படுத்தும் பொருட்கள் வைத்திருந்தவர்கள் உட்பட 37 பேர் பிடிபட்டனர் – தொடரும் விசாரணை

under investigation various offences

கெயிலாங்கில் கிட்டத்தட்ட ஒரு வாரம் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனை நடவடிக்கைகளில் பல்வேறு குற்றங்களில் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 37 பேர் பிடிபட்டனர்.

அவர்கள் 24 முதல் 79 வயதுக்குட்பட்ட, 26 ஆடவர்கள் மற்றும் 11 பெண்கள் அடங்குவர், அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண்ணின் சக்கர நாற்காலியை எட்டி உதைத்து ரகளை செய்த கிளினிக் ஊழியர் – வீடியோ வைரல்: விசாரணை

இந்த சோதனை நடவடிக்கை மார்ச் 28 மற்றும் ஏப்ரல் 1 க்கு இடையில் மேற்கொள்ளப்பட்டது. இதில் 28 வயதுடைய இருவர் சட்டவிரோதமான சமூக குழு உறுப்பினர் எனக் கூறி கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், இதில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக 54 வயதுடைய நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இருமல் மருந்து மற்றும் பாலியல் ரீதியாக மேம்படுத்தும் பொருட்கள் உட்பட, பதிவு செய்யப்படாத சுகாதாரப் பொருட்கள் என நம்பப்படும் பொருட்களை வைத்திருந்ததாக, 24 மற்றும் 43 வயதுக்குட்பட்ட நான்கு ஆடவர்கள் பிடிபட்டனர்.

மேலும் பல்வேறு குற்றங்களின் தொடர்பில் இதில் பலர் பிடிபட்டனர். அந்த 37 பேரிடமும் விசாரணை நடந்து வருகிறது.

வெளிநாட்டு ஊழியர்களின் பற்றாக்குறையால் திணறும் துப்புரவு நிறுவனங்கள் – “ஊழியர்கள் அதிகம் வேண்டும்” என வலுக்கும் கோரிக்கை