உள்ளாடைக்குள் வைத்து தங்கம் கடத்தல்….கோவை விமான நிலையத்தில் அதிகாரிகளிடம் சிக்கிய பயணி!

உள்ளாடைக்குள் வைத்து தங்கம் கடத்தல்....கோவை விமான நிலையத்தில் அதிகாரிகளிடம் சிக்கிய பயணி!
Photo: Trichy Customs (Preventive) Commissionerate

 

கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளுக்கு விமான நிறுவனங்கள் விமான சேவைகளை வழங்கி வருகின்றனர். அந்த வகையில், ஸ்கூட் நிறுவனம் (Flyscoot), கோவையில் இருந்து சிங்கப்பூருக்கும், சிங்கப்பூரில் இருந்து கோவைக்கும் பயணிகள் விமான சேவைகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறது.

வேலைக்கு சென்ற இடத்தில் பணிப்பெண்ணிடம் தகாத செயல்.. வெளிநாட்டு கட்டுமான ஊழியருக்கு சிறை, பிரம்படி

இந்த நிலையில், பிப்ரவரி 11- ஆம் தேதி அன்று காலை 11.30 AM மணிக்கு பயணிகளுடன் ஸ்கூட் நிறுவனத்தின் TR 540 என்ற எண் கொண்ட விமானம் (Flyscoot), சிங்கப்பூரில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு வந்து இறங்கியது. அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் சுங்கத்துறையின் வான் நுண்ணறிவுப் பிரிவினர் தீவிர சோதனை நடத்தினர். அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த ஆண் பயணியை தனியே அழைத்துச் சென்று அதிகாரிகள், அவரை முழுமையாக சோதனை நடத்தினர்.

சிங்கப்பூரில் குடியுரிமை வேண்டும்.. திருமணம் செய்த வெளிநாட்டினர் 8 பேர் கைது

அப்போது, தங்க பேஸ்ட்டை (Gold Paste) உள்ளாடையில் வைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து 24 கேரட் தூய தங்கத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த பயணியையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் தங்கத்தின் மதிப்பு 513.51 கிராம் என்றும், அதன் மதிப்பு ரூபாய் 32.55 லட்சம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.