நஷ்டஈடாக S$20,000 தொகையை பெற்ற நபர் – நீதிமன்றம் அதிரடி

(Photo: TODAY)

சிங்கப்பூரில் சட்டத்திற்கு புறம்பாக சிறையில் அடைக்கப்பட்ட ஆடவருக்கு நஷ்டஈடாக S$20,000 தொகையை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது.

சிங்கப்பூர் காவல் படை மீது வழக்குத் தொடுத்த அவர், தாம் பொய்யாக சிறையில் அடைக்கப்பட்டதாக வழக்கு தொடுத்தார்.

Work permit ஊழியர்களுக்கு முற்றிலும் இலவசம் – 2 நாள் சலுகை

மஹ் கியாட் செங் என்ற அந்த ஆடவர் 2017 ஆம் ஆண்டு, சன்டெக் சிட்டிக்கு வெளியே கைது செய்யப்பட்டார்.

பெண் ஒருவர் அவர் மீது செய்த புகாரில், அவர் தனது மகனின் தலையைத் தொட்டு இழுத்ததாக கூறி போலீசாரை அழைத்தார்.

அவர் பொய்யாக கைது செய்யப்பட்டு, தாக்கப்பட்டார் என்றும், அதனால் அவர் உடல் மற்றும் மன உளைச்சலுக்கு ஆளானார் என்றும் மஹ் வாதிட்டார்.

அவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் இதில் சொல்லப்பட்டுள்ளது. இந்நிலையில், அவருக்கு நஷ்டஈடு வழங்கப்பட்டது.

வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதியில் கலவரம் – 9 பேர் சிக்கினர் (Video)